Re:... posted byVilack SMA (Nha Be , Vietnam)[07 September 2012] IP: 113.*.*.* Vietnam | Comment Reference Number: 21935
கட்டுரையை படித்தபின் மனம் களறி சாப்பாட்டிற்காக ஏங்குகிறது . கட்டுரையாளர் சொன்னதுபோல காயல் களறி சாப்பாட்டுக்கு ஒப்பிடும்போது ஆம்பூரும் , ஹைதராபாத்தும் ஒரு துக்கடாதான் . எத்தனைபேர் " தலப்பா கட்டி " வந்தாலும் இங்கே நெருங்க முடியாது என்கிறார் . உண்மைதான் .
நண்பர் ஹிஜாஸ் மைந்தன் சொன்னதுபோல் இங்கே " சமபந்தி " நடப்பது உண்மைதான் . வசதி உள்ளவனும் , ஏழையும் சமமாக அருகருகே உட்கார்ந்து சாப்பிடுகின்றனர் . ஆனால் தனித்தனியாக ... வசதி உள்ளவன் அவன் அந்தஸ்துக்கு தகுந்தாற்போல் உள்ளவனுடனும் , ஏழை ஏழையுடனும் உட்கார்ந்து சாப்பிடுகிறான் .
கட்டுரையாளர் சொல்ல மறந்தது :
சஹன் சாப்பாட்டின் குறிக்கோளே சகோதரத்துவத்தை உணர்த்துவதுதான் என்று பெருமையாக சொல்கிறோம் . ஆனால் அப்படி நடக்கிறதா ? திருமண விருந்தில் ஒரு ஏழை தனியாக வந்துவிட்டால் அவர் பாடு கஷ்டம்தான் . யாரும் அவருடன் உட்கார மாட்டார்கள் . அதுபோல் வசதி உள்ளவர் தனியாக வந்து , திருமண வீட்டார் அவரை மற்றவருடன் உட்கார சொல்வார் . இவரோ தன்னுடைய பார்ட்னர் யார் என்பதை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு , சரியில்லையெனில் " ஒரு போனுக்காக வெயிட் பண்ணுகிறேன் , கொஞ்சம் பொருத்து உட்காருகிறேன் ' என்று சொல்லி சமாளித்து , தன் அந்தஸ்துக்கு ஈடான பார்ட்னர் வரும் வரை காத்திருப்பார் .
முன்பின் தெரியாதவர் , ஆனால் பார்பதற்கு நல்ல அந்தஸ்தாக தெரிகிறார் என்று உட்கார்ந்தாலும் சில சமயங்களில் ஒருசில கன்றாவிகளும் நடக்கும் . இப்படித்தான் ஒருமுறை நல்ல குடும்பத்து ஆளிடம் உட்கார்ந்தேன் . மிகவும் அசிங்கமான முறையில் சாப்பிட்டார் . நானும் சரியாக சாப்பிடாமல் எழுந்துவிட்டேன் . பெண்களோ ஒருபடி மேலே . வீட்டில் இருந்து வரும்போதே தன்னுடைய பார்ட்னரை அழைத்துக்கொண்டுதான் வருவர் . எங்கே இருக்கிறது சகோதரத்துவம் ?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross