Re:... posted byVilack SMA (Nha Be , Vietnam)[07 September 2012] IP: 113.*.*.* Vietnam | Comment Reference Number: 21938
குடிநீர் வரும் சமயம் மின்சாரத்தை நிறுத்துவதுதான் ஒரே வழி , சிறந்த வழி . மின்சாரத்தை நிறுத்துவதில் சில வழிமுறை சிக்கல்கள் இருக்கிறது என்று நகராட்சி சொல்கிறது . அரசின் எந்த ஒரு முறைகளை பின்பற்றும்போதும் சில வழிமுறைகள் இருப்பது உண்மைதான் என்றாலும் இந்த இடத்தில் நம் நகராட்சி போர்க்கால நடவடிக்கையில் இறங்க வேண்டும் . பார்க்க வேண்டியவர்களை பார்த்து நம் நிலைமையை சொன்னால் நிச்சயம் விரைவில் தீர்வு கிடைக்கும் . பூகம்பத்தால் , தீ விபத்தால் பாதிக்கப்பட்டு மக்கள் வீடின்றி , உணவின்றி தவிக்கும்போது , நிவாரணத்திற்காக அரசின் நடைமுறைகள்படி அமைச்சர் கையெழுத்து போட வேண்டும் , அதிகாரி வரவேண்டும் என்று காத்திருந்தால் முடியுமா ?
அடுத்து எல்லோர் வீட்டிலும் மீட்டர் மற்றும் வாழ்வு பொருத்தப்பட வேண்டும் . மக்கள் குடிநீரை குடிப்பதற்கும் , சமையல் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் எடுத்துவிட்டு வாழ்வை மூடும் பழக்கம் வரவேண்டும் .
ஒருசில வீடுகளில் மோட்டார் வைத்தும் உறிஞ்சவில்லை . தண்ணீரும் சரியாக வரவில்லை . அவர்கள் அடிபைப் வைத்து தண்ணீர் எடுக்கின்றனர் . இது போன்றவர்கள் வீடுகளுக்கு , அவர்கள் வீட்டிற்கு வரும் குழாய் சரியான மட்டத்தில் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும் .
இறுதியாக , மழை வேண்டி இறைவனிடம் கையேந்துங்கள் . இறைவனின் அருள்மழைதான் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross