Re:...முகவரி தவறி வந்த மடல் posted bymackie noohuthambi (kayalpatnam)[07 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21941
புரட்சி தலைவி அவர்களுக்கு முகவரி இட்டு எழுத வேண்டிய மடல் kaayalpatnam .com க்கு வந்துள்ளது. எனினும் காயல்பட்டினம் மக்கள் உலகெங்கும் வாழ்கிறவர்கள் இதனை பார்த்து உண்மை நிலையை விளங்கி கொள்ள உதவியாக இருக்கிறது.
தொப்புள்கொடி உறவு, தாலிக்கொடி உறவு என்பதெல்லாம் வெறும் நாடகம். பணத்தின் மீதுதான் பக்தி என்றபின் பந்த பாசம் என்பது ஏதடா....அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே....என்று கவிஞர் பாடுவார்.
மறுமலர்ச்சி காணுவதற்கு துடிப்பவர் சட்டமன்றத்தில் ஒரு இடம் கூட பெற முடியாத மக்கள் செல்வாக்கு பெற்றவர் என்பதும், அணிமாறி சால்வை அணிவித்து புரட்சி தலைவி துதி பாடினாலும் இலவு காத்த கிளியாக இரண்டு இலக்க இடத்துக்காக தவமிருந்து கிடைத்த இடத்தையும் இழந்தவர் என்பதும். கள்ளத்தோணியில் இலங்கை சென்று தன் தமிழ் இனத்தை பார்க்கசென்ற பாராளுமன்ற உறுப்பினர் என்பதும், தற்போது அதலபாதாளத்தில் இருக்கும் தனது செல்வாக்கை தூக்கிப்பிடிக்க ஒரு கொழுகொம்பு தேவைப்படுவதால் இந்த ஈழ பிரச்சினையை ஈனத்தனமாக கையாண்டு இந்த தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் கெட்ட பெயர் வாங்கி கொடுக்க புறப்பட்டிருக்கிறார்கள் என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி. மற்றப்படி இலங்கை தமிழர்களுக்கு உதவியாவது வெங்காயமாவது......
சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ, தெரிந்தும் தெரியாமல் நடந்திருந்தால் அது திரும்பவும் வராமல் பார்த்துக்கோ என்று புரட்சி தலைவர் அவர்கள் மானசீகமாக புரட்சி தலைவி அவர்களிடம் சொல்வது காதில் கேட்கிறது. விநாச காலே விபரீத புத்தி என்று சொல்வார்களே அதுதான் இது. இந்த நிலையும் மாறும். THIS TOO WILL PASS AWAY எனபது முதல் அமைச்சர் நன்கு அறிவார்.
2014 இல் இந்த நாட்டின் பிரதமராக முதல்வர் அவர்கள் வரவேண்டுமென்று நல்லாசி கூறும் சோ ராமசாமி அவர்கள் இவருக்கு நல்லுரை வழங்குவார்கள் என்று எதிர்பார்ப்போம். ஒரு வேளை அந்த கனவு நனவானால், அன்றைய நாளேடுகளில் இப்படி ஒரு செய்தி வரும்.
" இந்திய பிரதமர் செல்வி ஜெயலலிதா அவர்கள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே அவர்களை கொழும்பு அலரி மாளிகையில் சந்தித்து இலங்கை இந்திய நல்லுறவுகள் பற்றி பேச இன்று இலங்கை பயணம்."...
.கனவு மெய்ப்படவேண்டும்...பாரதியார் நாமம் வாழ்க ...அண்ணா நாமம் வாழ்க...... புரட்சி தலைவர் நாமம் வாழ்க..... .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross