Re:...தண்ணீர் தண்ணீர் .... posted bymackie noohuthambi (kayalpatnam)[07 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21944
சகோதரர் மஹ்மூத் அவர்கள் தனது ஆதங்கத்தை அள்ளிகொட்டிவிட்டீர்கள்.
உலமாக்கள் நிறைந்த ஊர். ஹராம் ஹலால் பற்றி அதிக உபதேசங்கள். வருடத்தில் மூன்றில் இரண்டு பங்கு நாட்கள் ஹதீதுகள் இறைநேசசெல்வர்கள் வாழ்ந்து காட்டிய வழிகள் பற்றி நசீஹத்து செய்யப்படும் ஊர். பள்ளிவாசல்கள், பெண்கள் தைக்காக்கள்,மதரசாக்கள்,பொது நல நிறுவனங்கள் நிறைந்து காணப்படும் ஊர். இப்படி பட்ட ஊரில் வாழும் மக்கள் உலகின் பல் வேறு பகுதிகளில் தொழிலில் கொடிகட்டி பறப்பவர்கள் சுபுஹானல்லாஹ்.
இந்த ஊரிலேயே குடி நீரை மோட்டார் வைத்து உறிஞ்சி எடுப்பது பாவம் என்று சொல்ல வேண்டுமா, இதை தடுக்க ஒரு ஆயிரம் ரூபாய் பரிசு கொடுக்கவேண்டுமா?
அந்த காலத்தில் அரசனின் சந்தேகத்தை தீர்ப்பவருக்கு ஆயிரம் பொற்காசுகள் வழங்கப்படும் என்று அறிவித்தபோது அதற்காக ஆசைப்பட்டு கவிதை எழுதிக்கொடுத்ததை தருமி என்ற புலவன் வாசித்தபோது, அங்கிருந்த நக்கீரன் என்ற அறிஞர் சொன்னாரே...நீரே முக்கண் முதல்வரும் ஆகுக...நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...என்று. அதேபோல் இந்த மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சுவது ஹராம் என்று எந்த ஜும்மாவிலாவது எந்த ஹதீத் மஜ்லிசிலாவது உலமாக்கள் சொன்னதுண்டா, மது அருந்துவது பாவம், களவெடுப்பது பாவம். கற்பழிப்பது பாவம் என்று சொல்பவர்கள் அதற்கு இணையான இந்த பாவத்தை பற்றி வாய் திறந்து பேசியதுண்டா...நாம் நடத்தும் கூட்டங்களில் இதை பற்றி வாய் திறந்ததுண்டா.....எனவே இந்த கொடும் குற்றத்துக்கு நாம் எல்லோரும் ஒரு வகையில் உடந்தையாக இருந்திருக்கிறோம் என்பதுதான் உண்மை.
இப்போது நகர்மன்றம் அவற்றை அகற்றுவதில் முழுமுயற்சியுடன் களம் இறங்கி இருக்கிறது. இதற்கு நாம் முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். எல்லா ஜமாதார்களும். பொது நல அமைப்புகளும் ஐக்கிய பேரவை உள்பட எல்லா பெரியவர்களும் இதற்கு உதவ வேண்டும். எல்லா கட்சியினரும். எல்லா சங்கங்களும் இந்த பாவத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க களம் இறங்க வேண்டும், ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக்கொண்டு போராட்டம் செய்து கொண்டு இருப்பதால் பிரச்சினை தீர்ந்து விடாது.
"IF YOU CANNOT SOLVE A PROBLEM,THEN YOU ARE PART OF THAT PROBLEM" என்று ஆங்கிலத்திலே சொல்வார்கள்.
எனவே ஒன்று பட்டு இந்த மோட்டார் வைத்து உறிஞ்சும் போக்கை இல்லாமல் செய்வோம். வாருங்கள்.அல்லாஹ் நம் முயற்சிக்கு நல்ல பலனை தருவான். எல்லோருடைய கண்களையும்இதய கதவுகளையும் திறக்கும் கட்டுரையாக உங்கள் கட்டுரை அமையட்டும். நாளை புதிதாய் பிறப்போம்.
1000 ரூபாய் பரிசு எல்லோருக்கும் வேண்டும். ஊரில் 40 ,000 மக்கள் ஜனத்தொகை என்கிறார்கள். உங்களுக்கு அது பெரிய தொகை இல்லை!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross