இனி ஒரு உலக யுத்தம் வருவதாக இருந்தால் அது தண்ணீருக்காகவே இருக்கும் என்பது அறிஞர்களின் கருத்து. இப்போது சமீப காலமாக நமது ஊரின் விரிவாக்கத்திற்கு ஏற்ப குடிநீர் விநியோகம் செய்வதற்கு முறையான திட்டங்கள் ஒன்னும் சரிவர இயற்றவும் இல்லை, அதை பற்றி யாருக்கும் கவலையுமில்லை அக்கறையுமில்லை அதைப்பற்றி யாராவது கேட்டால் வேலை வெட்டி இல்லாத பயல் என்று பட்டம் சூட்டிவிடுவதும் நடைமுறை ஆகிவிட்டது.
மார்க்கம் ஒழு செய்வதற்கே வரைமுறை வைப்பதுடன் வீண் விரயம் செய்பவர்களை இறைவன் விரும்புவதில்லை என்று இருக்க குடிக்கவே நீரின்றி பலர் தவிக்கும் போது மின் இறைப்பான் கொண்டு நீரிறைக்கும் (அடுத்தவர்களின் குருதி குடிக்கும் மனித அட்டைகள் ) இறையச்சம் இல்லாதவர்கள் தங்கள் உடுப்பு முதற் கொண்டு வீட்டின் பளிங்கு தரைவரை கழுவுவதும் குடிநீரைகொண்டே என்பது வேதனையும் வெட்கமும் படவேண்டிய செயல்.
குடிநீர் அனைவருக்கும் சரிசமமாக கிடைக்க வேண்டும் எனில் முதலில் நமது ஊருக்கு ஒதுக்கும் நீரின் அளவு சரியான முறையில் வருகின்றதா என்பதை அளவிட டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் கூடிய மானி (மீட்டர் ) பொறுத்த வேண்டும் .
வழியில் தண்ணீர் திருடுவதை கண்காணிக்கவும் எங்கேனும் குழாய் உடைந்தோ அல்லது அடைப்பு இருப்பினோ அதனை கண்காணிக்க GSM TRACKING போன்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இணையம் வழியாக கணினி மூலம் கண்காணிக்க இயலும்.
நம் நாட்டின் மென்பொருள் மற்றும் தொழில்நுட்பத்தினை பலநாடுகளும் பயன்படுத்துகின்றன . எனவே இது ஆரம்பத்தில் செலவு அதிகம் எனினும் ஒரு அரசாங்கத்தால் ஆகக்கூடியதே .
மேலும் நம் ஊரின் அனைத்து வீடுகளும் குடிநீர் மேல்நிலை தொட்டிகளைவிட தாழ்வாகவே இருப்பதால் குடிநீர் விநியோக சமயத்தில் வேகத்தை கூட்டி திறந்தால் அனைத்து வீட்டிற்கும் தானாகவே தண்ணீர் கிடைக்கும் இதற்கு வழியில் அமைக்க பட்டு இருக்கும் வால்வுகள் தரமானதாகவும் பழுது இல்லாமலும் இருக்கும்.
மேலும் கிணறுகளில் சுவையான நீர் இருப்பின் அதனை பயன்படுத்துவது சிறந்தது ஏனெனில் அது சுத்திகரிக்கப்பட்ட நீர் .
இறுதியாக தவறிழைப்பவர்கள் திருந்தி தவ்பா செய்து அதில் இருந்து மீளுங்கள் , நமது வாழ்வாதாரத்தை (தண்ணீரை) வீண் விரயம் செய்யாதீர்கள். வல்ல அல்லாஹ் நமக்கு நீரின் அவசியத்தை அறிந்து அதை நல் வழியில் செலவு செய்து இறைபொருத்ததை பெறுவோமாக ஆமீன்.
"யா -அல்லாஹ் எங்கள் ஊரை குடிநீர் தட்டுப்பாட்டை விட்டும் காப்பாற்று ! எங்கள் யாவருக்கும் உன் அருள் மழையை பொலிந்தருள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross