Re:... posted byNMZ.Ahamedmohideen (KAYALPATNAM)[09 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21999
அஸ்ஸலாமுஅலைக்கும் [வரஹ்மதுல்லாஹ் ]!
ஜித்தா காயல் நலமன்றத்தின் மக்கா உறுப்பினர்களின் ஒன்றுகூடல் மற்றும் கலந்தாலோசனைக் கூட்டம் செப்டம்பர் 7 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் !
இந்நிகழ்ச்சியில் ஆர்வத்தோடு அனைத்து உறுப்பினர்களும் பங்கெடுத்தது மட்டுமல்லாமல் மக்காவுக்கு வேலை நிமித்தம் புதிதாக வந்தவர்களும், தம்மை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டது மிகமிக மகிழ்ச்சி....
[அல்ஹுஜ்ஜாஜு வல் உம்மார் லுயூபுர்ரஹ்மான் ] அதாவது ;ஹஜ்ஜு உம்ரா செய்ய வருவோர் கள் ரஹ்மானான அல்லாஹ்வின் விருந்தாளிகள் . அத்தகைய விருந்தாளி களை தமது விருந்தாளிகலாக ஏற்று தம்மால் முடிந்த பணிகளைசெய்வது நமது மக்களுக்கே உள்ள தனிச்சிறப்பு ....!
அதிலும் இன்னுமோர் சிறப்பு கவனம் எடுத்து செம்மையுடன் செயல் பட முன் வந்திருப்பது மாஷாஅல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ் !மிகமிக பாராட்டுக்குரிய விஷயம்.
மேலும் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக நமதூரிலிருந்து மக்கா வரும் ஹாஜிகளுக்கு வழிகாட்டல், மருத்துவ உதவிகளைப் அரசாங்கம் அனுமதிக்கப்பட்ட முகாம்களிலிருந்து பெற வழி செய்தல், காணாமல் போன பொருட்கள், பணம் ஆகியவற்றை எவ்வாறு? எங்கே பெறவேண்டும்? என்பது குறித்த விளக்கம் ஹாஜிகளுக்கு அளித்தல், இடம் தெரியாமல் போவோருக்கு அவர்கள் தொடர்பு கொள்ள வசதியாக உறுப்பினர்களின் பெயர் மற்றும் கைபேசி எண்கள் அடங்கிய கையேடு வழங்குவது போன்ற உதவிகளைச் செய்வது குறித்து ஆலோசணை நடத்தி அதற்காக ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. இதில் பெரும்பாலானோர் தாமே முன் வந்து தமது பெயர்களையும் கைபேசி எண்களையும் பதிவு செய்தனர்.
மாஷாஅல்லாஹ் !மிகமிக அருமையான நலத்திட்டங்கள். ஆர்வத்தோடு அனைத்து உறுப்பினர்களும் இறங்கி இருக்கும் இத்திட்டத்தில் வெற்றிகரமாக செயல்ப்பட வல்லோன் அல்லாஹ் தௌபீக் செய்வானாக .ஆமீன் !
என் அருமை வாப்பா அவர்களும் இந்த மக்கா லீ-மெரிடியன் ஹோட்டலில் நடந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது எனக்கு இன்னும் சந்தோஷம் !அல்ஹம்து லில்லாஹ் ....வ ஷுக்ரன் லில்லாஹ்.....!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross