Re:...மகுதூம் பள்ளி தொட்டி posted bymackie noohuthambi (kayalpatnam)[10 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22007
மற்ற தொட்டிகளிலிருந்து எவ்வளவு தண்ணீர் விநியோக்கிக்கப்படுகிறது என்று அவரவர்கள் பகுதி மக்களை கேட்டால் தான் தெரியும்.
ஆனால் மகுதூம் பள்ளி தொட்டி கட்டப்பட்டு பல வருடங்கள் ஆகியும் அதில் தண்ணீர் நிரப்பப்படாமல் வெயில் அடித்து வெடித்து காணப்படுகிறது. இது பற்றி முன்னாள் நகரமன்ற துணை தலைவரிடம் அப்போதே கேட்டேன். அவர் சொன்ன பதில் திகைக்க வைத்தது. ஆனால் உண்மையும் அதுதான். எல்லோரும் எங்கள் பகுதிக்கு நீர் தேக்க தொட்டி வேண்டும் என்று கேட்கிறார்கள். நாங்களும் போராடி அதை கட்டி முடிக்கிறோம். தண்ணீர் வருத்து கணிசமாக இருந்தால்தானே தொட்டிகள் நிரம்பும் என்று சொல்லி விட்டார்.
சென்ற முறை இந்த வார்டின் உறுப்பினரும் நகரமன்ற தலைவரும் ஒரே ஆள்தான். அந்த பெருந்தகை அவர்களாலேயே இந்த தொட்டியை நிரப்ப ஏற்பாடு செய்ய முடியாமல் போய்விட்டது.
நடைபெற்று முடிந்த நகரமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக போட்டி இட்ட எல்லோரும் அவர்கள் வாக்குறுதிகளில் ஒன்றாக இந்த தொட்டியை நிரப்ப ஆவன செய்வோம் என்று சொன்னார்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எவ்வளவு மாதங்கள் ஆகிவிட்டன. தலைவி உறுப்பினர்கள் சண்டை ஒருவொருக்கு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு நமது பாராளுமன்றம் மாதிரி இந்த சிறிய நகரமன்றத்தின் அலுவல்களையும் முடக்கி கொண்டிருக்கிறார்கள்.
ஐக்கிய பேரவையின் தோல்வி இந்த ஊர் முன்னேற்றத்தின் தோல்வி போல் ஒரு சாரார் நினைத்துக்கொண்டு எந்த நல்ல காரியங்களிலும் தலை இடாமல் வெளியில் இருந்து வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்கள். ஐக்கிய பேரவையிலேயே கோஷ்டி இருக்கிறதா என்று சந்தேகப்படும் அளவுக்கு நிலைமை போய்கொண்டிருக்கிறது. யாரிடம் சொல்வது. ஊரில் உள்ள இனைய தளங்களில் ஐக்கிய பேரவை பெரியவர்களுடைய பேட்டிகளோ அவர்களின் அபிப்பிராயங்களோ வெளிவருவதில்லை. அதை நடுநிலையாளர்களும் கண்டுகொள்வதில்லை. இப்படியே போனால் எந்த திட்டமும் நிறைவேறாது. ஊரில் முன்னேற்றமும் ஏற்படாது. இருக்கின்ற வறட்சி இன்னும் அதிகமாகுமே தவிர குறையாது. அல்லாஹ்வின் உதவியும் வராது. எந்த தொட்டியும் நிறையாது..ஒரு முஸ்லிமுக்கு ஒரு குறை ஏற்பட்டால் அடுத்த முஸ்லிமுக்கு அது வலிக்க வேண்டும்.என்று உலமாக்கள் சொல்வார்கள், ஆனால் என்ன நடக்கிறது.எல்லோரும் சிந்தித்து பார்க்க கடமை பட்டிருக்கிறோம்.
நல்ல விஷயத்தை ஒருவர் பரிந்துரைத்தால் அவருக்கு அந்த நல்ல விஷயத்தில் பங்கு உண்டு. தீய விஷயத்துக்கு ஒருவர் துணை போனால் அந்த தீய விஷயத்தில் அவருக்கும் பங்கு உண்டு என்று அல்லாஹ் சொல்வதை நாம் எல்லோரும் நினைத்து பார்த்து. அல்லாஹ்வுக்காக நமது நிலைப்பாடுகளை மாற்றி ஒன்றிணைந்து செயல்பட்டால் நாம் நினைக்கும் சிறப்பான நகர்மன்றம் அமையும்.அல்லாஹ் நல்லருள் புரிவானாக. நல்ல மனமாற்றத்தை தருவானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross