Re:...பிணமும் பணமும் posted bymackie noohuthambi (kayalpatnam)[12 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22034
காலத்தின் கட்டாயம் இந்த கட்டுரை. உரக்க சொல்ல வேண்டிய செய்தி.
ஆனால் நன்னெறிகளை அமுல்படுத்த வேண்டிய அரசுகளே இதற்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து நெய்யூற்றி வளர்க்கும்போது இவற்றை எங்ஙனம் ஒழிக்க முடியும்?
குடி குடியை கெடுக்கும் என்ற விளம்பரம், உள்ளே சென்றால் வகை வகையான மதுபானங்கள் பரிமாறப்படுகிறது.
புகைபிடிப்பது ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் என்ற விளம்பரம். கடைகளில் கேட்டால், இழுக்கு இழுக்க இறுதி வரை இன்பம் தரும் என்ற இன் சொல்லுடன் விதவிதமான சிகரெட்டுக்கள். இன்னும் விபசார விடுதிகளை இந்த அரசு தொடங்காமலிருக்கிறதே, யாராவது சொல்லவேண்டாமா பம்பாயில் சிவப்பு விளக்கு ஏரியா இதற்கென ஒதுக்கப்பட்டு அதற்கு அரசு அங்கீகாரமும் கொடுக்கப்பட்டு அரசுக்கு வருமானம் அபரிமிதமாக கிடைக்கிறதே, தமிழக அரசு பாராமுகமாக இருக்கிறதே, எத்தனை கோடி வருமான இழப்பு இந்த அரசுக்கு உடனடியாக அடுத்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அதற்குண்டான அறிவிப்பு வந்தால் நல்லதே!
இப்படி வருமானத்தை மட்டும் மனதில் கொண்டு இயங்குகின்ற அரசுகள் பட்டாசு தயார் பண்ணுவதை தடை செய்யுமா..கனவு காண்கிறீர்களா...
இஸ்லாத்துக்கும் பட்டாசுக்கும் என்ன சம்பந்தம் என்றா கேட்கிறீர்கள். பெருநாளை விடுங்கள். கல்யாண ஊர்வலத்தில் மாப்பிள்ளை பைத்து சொல்லி அழைத்து வரப்படுகிறார், அந்த இடத்தில் வெடி போட்டு அழைத்துவருகிறார்கள். வெளியூரில் அல்ல, நமதூரில்தான் இது நடக்கிறது.
வரவே வராது, ஆபத்தே இல்லை என்று மத்திய அரசும் மாநில அரசும் விஞ்ஞானிகளும் உறுதியாக சொன்ன பிறகும் நீதி மன்றம் எல்லா சாதக பாதகங்களை ஆராய்ந்து தீர்ப்பு வழங்கிய பிறகும் கூடங்குளம் வீதியிலே வந்து போராடுபவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆலவட்டம்போடும்,அரசியல் மேதாவிகள் வாழும் தமிழகத்தில். பட்டாசு தொழிலில் தினசரி மாண்டுபோகும் தீயில் கருகிபோகும் உயிர்கள் பற்றி கவலைப்படுவதில்லை. காரணம் இங்கே கருகி பிணமானால் உயிருக்கு விலையாக 5 லட்சம் கொடுத்து விட்டு அடுத்த வேலையை பார்கிறார்கள். அரசுக்கு கற்பக தருவாக அட்சய பாத்திரமாக , கோடிக்கணக்கில் வருமானம் தரும் பட்டாசு தொழிலை நிறுத்துவதா...மனித உயிருக்கு விலையாக இப்படி சில லட்சங்களை கொடுத்து சமாளிப்பதில் என்ன நஷ்டம் ஏற்படப்போகிறது.
பிணத்தையும் பணமாக்கும் மந்திர சக்தி அரசுகள் கையில் இருக்கும் வரை இந்த மனித உயிர்கள் மலிவாகிவிட்டதை யாரும் தவிர்க்க முடியாது.
குறைந்த பட்சம் நமதூரில் மட்டுமாவது, பிளாஸ்டிக்கை ஒழிக்க முயற்சி எடுத்ததுபோல் இந்த பட்டாசு வெடிகளை தடை செய்ய நகர்மன்றம் முயற்சி செய்யலாம். ஆனால் ஊரில் எல்லா ஜமாஅத்தார்களும் பொது நல நிறுவனங்களும் இதற்கு ஒத்துழைத்து களம் இறங்கவேண்டும். உங்கள் கட்டுரை அதற்கான தலைவாசலை திறந்து விடுமா...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross