கண்கள் குளமாகின்றன posted byA.H.M Khalji (Mumbai)[13 September 2012] IP: 114.*.*.* India | Comment Reference Number: 22070
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ஜெய்ப்பூர் ஜக்வாவின் தலைவரும் சிறந்த சமூக சேவையாளரும், மக்களுக்கு செய்யும் தொண்டினை நற்பேராக கருதி செய்து வந்த வரும். பல மொழிகளை அறிந்த பாசமிகு பண்பாளரும், எல்லோரிடமும் அன்பாக பழகி மாமா, என்று அழைக்கப்பட்டவருமான அல்ஹாஜ் S.A முஸ்தபா கமால் அவர்கள் நேற்று இரவு வஃபாத் ஆன செய்தி கேள்விப்பட்டு மிகவும் கவலையடைந்தேன்.. அவர்களும் அவர்களின் துணைவியாரும் இந்த வருடம் ஹஜ் செய்ய நாடியிருந்தார்கள். விமானம் புறப்படும் தேதியும் வந்து விட்ட சமயத்தில் அவர்களின் திடீர் மரணம் அனைவரையும் பெரும் கவலையில் ஆழ்த்தி விட்டது..
இந்த ரமளானில் அவர்களுடன் ஜெய்ப்பூரில் மிகவும் நெருக்கமாக பழகும் வாய்ப்பு கிடைத்தது. நல்ல ஆலோசனைகளை தந்து கொண்டிருந்தார்கள்.
ரமளானில் நமதூரைச் சேர்ந்த ஒரு சகோதரர் சுகவீனம் அடைந்தவுடன் முஸ்தபா மாமா அவர்களுக்கு தகவல் தந்ததும் சற்றும் சிரமம் பாராமல் அந்த நோயாளியை நலம் விசாரித்து அவரை மருத்துவரிடம் உடனே அழைத்துச் சென்று பரிசோதித்து மருத்துவம் செய்து அன்றே அந்த நபர் ஊருக்கு போக எல்லா ஏற்பாடுகளையும் செய்துக் கொடுத்ததை நாங்கள் அனைவரும் அறிவோம். அப்படிப்பட்ட நல்ல தூய உள்ளத்துக்கு சொந்தக்காரரான அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் அவர்களின் நண்பர்களுக்கும், அவர்களுடன் பழகியவர்களுக்கும் வல்ல ரஹ்மான் அழகிய பொறுமையை கடைப்பிடிக்க அருள் செய்வானாக!!
மேலும் மர்ஹீம் அவர்களின் பிழைகளைப் பொருத்து அவர்களது மண்ணறையை விசாலப்படுத்தி புனிதமிகு ஜன்னத்துல் பிஃர்தவுஸில் நுழையச் செய்வானாக! ஆமீன் யாரப்பல் ஆலமீன்.....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross