இன்னா லில்லாஹி... posted byS.K.Salih (Kayalpatnam)[13 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22089
கண்ணியத்திற்குரிய மர்ஹூம் பெருந்தகை அவர்களோடு எனக்கு நல்ல அறிமுகம் ஏற்பட்டது - ஜெய்ப்பூர் காயல் நல மன்றத் தலைவர் என்ற அடிப்படையில்தான்!
கண்டிப்பும், கனிவும் ஒருசேரப் பெற்றவர்...
ஓய்வெடுக்க ஆயத்தமான வயதிலும் உழைக்கும் ஆர்வத்தை சிறிதும் குறைத்துக்கொள்ளாதவர்...
பொருளீட்டச் சென்ற இடத்தில், பிறந்த மண்ணுக்காக ஏதேனும் செய்தேயாக வேண்டும் என்ற துடிப்போடு வாழ்ந்தவர்... அதற்காகவே ஜக்வா மன்றத் தலைவர் என்ற பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்...
அன்னாரின் மறைவு அவர்கள் குடும்பத்தாருக்கு மட்டுமின்றி, நகர்நலம் நாடும் அனைவருக்கும் ஈடு செய்ய இயலாத பேரிழப்பே என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் அனைத்துப் பிழைகளையும் பொருத்தருளி, அவர்களது நற்கருமங்களை - குறிப்பாக இவ்வாண்டு அவர்கள் தம் குடும்பத்தாருடன் ஹஜ் செய்ய நாடியதை - ஹஜ் செய்ததாகவே நன்மைக் கணக்கில் எழுதி அனைத்தையும் ஏற்று, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் மனைவியார், தம்பி ஹாஃபிழ் குத்புத்தீன் உள்ளிட்ட அவர்களின் அன்பு மக்கள், உற்றார் - உறவினர் மற்றும் ஜக்வா மன்றத்தின் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த ஸலாமைத் தெரிவித்துக்கொள்கிறேன்... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ்... வல்ல அல்லாஹ் உங்கள் யாவருக்கும் “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross