செய்தி: ஜெய்ப்பூர் கா.ந.மன்றத்தின் (ஜக்வா) மறைந்த தலைவர் ஜனாஸா குத்பா பெரிய பள்ளியில் நல்லடக்கம்! நகரப் பிரமுகர்கள் உட்பட திரளானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bymackie noohuthambi (kayalpatnam)[14 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22148
மர்ஹூம் அவர்களுக்கு அல்லாஹ் மேலான சொர்க்க வாழ்வை கொடுத்து அருள்வானாக. அடியேனுக்கும் அவர்கள் janaaza தொழுகையில் கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைத்தது.
அவர்கள் மகனாரின் அறிவித்தல், கொடுக்கல் வாங்கலில் அவர்கள் காட்டி வந்த நேர்மை அவர்கள் மக்களிடம் பிரதிபலிப்பதை காட்டுகிறது. எல்லா மக்களும் அவர்கள் பெற்றோர் மறைவுக்கு பிறகு இப்படி ஒரு அறிவித்தலை பொது மக்களிடம் கூற கடமை பட்டுள்ளோம். நல்ல ஒரு முன்மாதிரி.
"மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என் நோற்றான்கொல் எனும் சொல்" என்று தமிழிலே சொல்வார்கள். இவனுடைய வாப்பா என்ன நல் அமல்கள் செய்தார்கள் இப்படி பட்ட பிள்ளையை பெறுவதற்கு என்று எல்லோரும் வியக்கும் வண்ணம் அவர்கள் மக்கள் நடப்பார்கள் என்பது இந்த நிகழ்விலிருந்து தெரிகிறது.
அல்லாஹ் மர்ஹூம் அவர்கள் மக்களுக்கும் குடும்பத்தினருக்கும் நல்ல பொறுமையை கொடுத்து விழி நீரை துடைத்துக்கொண்டு இனிமேல் ஆக வேண்டிய காரியங்களை பொறுப்புடன் முன்னெடுத்து செய்வதற்கு அருள்புரிவானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross