அனைவருக்கும் நன்றி - ஜஸாக்குமுல்லாஹு கைரா! posted byPrabu Qutbuddeen (Kayalpatnam)[14 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22160
அன்பார்ந்த காயலர் நன்னெஞ்சங்கள் அனைவருக்கும் மர்ஹூம் பிரபு முஸ்தஃபா கமால் ஹாஜி அவர்களது மக்கள் உள்ளிட்ட குடும்பத்தாரின் அகங்கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹ்...
வல்ல அல்லாஹ்வின் நாட்டப்படி, எங்களன்புத் தந்தையார் நம் யாவரை விட்டும் பிரிந்து, அழியப்போகும் இவ்வுலகை விட்டு - நிரந்தர உலகை நோக்கி சென்றுவிட்டார்கள்... இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
வல்லோனின் கட்டளைக்கிணங்க, தாங்க முடியாத இந்த இழப்பைப் பொருந்திக்கொள்ள நாங்கள் ஆயத்தமாகி வருகிறோம்...
எங்களன்புத் தந்தையின் மறைவையொட்டி, இணையதளங்களின் வாயிலாகவும், தொலைபேசி - மின்னஞ்சல் வாயிலாகவும் - அவர்களின் மஃபிரத்திற்காக பிரார்த்தனை செய்து, நாங்கள் மனம் நொந்து போயுள்ள இந்நேரத்தில் எங்கள் நெஞ்சங்களை வருடும் வகையில் ஆறுதலான வாக்கியங்களையும் தெரிவித்த அனைத்து நல்ல நெஞ்சங்களுக்கும் கருணையுள்ள அல்லாஹ் எல்லா நற்கூலிகளையும் வழங்கியருள்வானாக என்று இந்நேரத்தில் உளமார பிரார்த்திக்கிறோம்.
எங்கள் பாசத்திற்குரிய தந்தையவர்கள், தங்கள் வாழ்நாளில் தங்களில் யாருக்கேனும் அறிந்தோ - அறியாமலோ, தங்களின் சொல்லாலோ - செயலாலோ மனதைக் காயப்படுத்தியிருப்பின் அவர்கள் சார்பில் அவர்களின் மக்களாகிய நாங்கள் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். தாங்கள் யாவரும், அல்லாஹ்வுக்காக - அவனது திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காக மனம் பொருத்தருள அன்புடன் வேண்டுகிறோம்.
அத்துடன், எங்கள் அன்புத் தந்தையவர்கள், தங்கள் வாழ்நாளில் தங்களில் யாருக்குனும் பணமோ - பொருளோ தர வேண்டியிருந்தால், அவர்களின் மக்களாகிய நாங்கள் அதற்குப் பொறுப்பேற்க ஆயத்தமாக உள்ளோம். அதுபோல, எங்கள் தந்தைக்கு தங்களில் யாரேனும் பணமோ - பொருளோ கொடுக்க வேண்டியிருந்தாலும் அதற்காகவும் எங்களைத் தொடர்புகொள்ளலாம்.
சம்பந்தப்பட்டவர்கள் இதன் கீழுள்ள எங்கள் தொலைபேசி எண்களிலோ, மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்புகொண்டு தகவல் தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
நிறைவாக, எங்கள் தந்தை ஜெய்ப்பூரில் காலமானவுடன், அங்கு அவர்களை குளிப்பாட்டி - கஸஃப் மாற்றி, அனைத்து கிரியைகளையும் எங்கள் குடும்பத்தார் போல முன்னின்று பொறுப்பேற்று செய்த ஜெய்ப்பூர் காயல் நல மன்றத்தின் அனைத்து நிர்வாகிகள் - உறுப்பினர்கள் மற்றும் இதர காயலர்கள், குறிப்பாக, எங்கள் தந்தையின் மேல் பற்றும் பாசமும் கொண்டு, அவர்கள் காலமான நேரத்திலிருந்து, அவர்களது ஜனாஸா அங்கிருந்து அனுப்பப்படும் வரை நமதூர் மக்களுடன் இணைந்து கடமையாற்றிய ஜெய்ப்பூர் ஜமாஅத்தைச் சேர்ந்த பூர்விக குடிமக்களாகிய எங்கள் அன்புச் சகோதரர்கள் யாவருக்கும் எங்கள் உள்ளங்குளிர மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஜஸாக்குமுல்லாஹு கைரா...
ஜெய்ப்பூரிலிருக்கும், எங்கள் அன்பிற்குரிய சகோதரர் பிலால் அவர்கள் இத்தகவலை, அங்குள்ள நமதூர் மக்கள் யாவருக்கும் தெரிவிப்பதுடன், குறிப்பாக ஜெய்ப்பூர் ஜமாஅத்தைச் சேர்ந்த பூர்விக குடிமக்களுக்கும் எங்களது இந்த நன்றியறிவித்தலை பொறுப்பேற்று தெரிவித்து உதவுமாறு அன்புடன் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம்.
கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் அவர்களது பாவப் பிழைகளைப் பொருத்தருளி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில், நபிமார்கள் - ஷுஹதாக்கள் - ஸித்தீக்கீன்கள் - ஸாலிஹீன்களுடன் அவர்களையும், நம்மையும் சேர்த்தருள்வானாக, ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross