When Rome was burning Nero was fiddling. posted byAbdul Wahid S. (Kayalpatnam.)[14 September 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 22170
1 ) நகர்மன்ற சமாதான முயற்சிகள் குறித்து ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை சலீம் - காயல்பட்டணம்.காம் இணையதளத்திற்கு தந்த பதில்கள்!
-------------------
2 ) நகர ஜமாஅத் தலைவர்கள் மற்றும் மக்களுக்கு நகர்மன்றத் தலைவி கடிதம்!
--------------------
3 ) காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 14 உறுப்பினர்கள் பெயரில் நகரில் விநியோகிக்கப்பட்ட பிரசுரங்கள்!
--------------------
மேலே உள்ள இந்த மூன்று செய்திகளை படித்த பின்
" மடியில் கனமிருந்தால் வழியில் பயமிருக்கும்" என்ற பழமொழி நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
இவர்கள் தலைவி மீது பல குற்றச்சாட்டுகளை மக்கள் முன் வைத்துள்ளார்கள். இதை நிருபிக்கும் வண்ணம் எந்த சாட்சிகளையும் சமர்பிக்கவில்லை. சமர்பிக்கவும் முடியாது. காரணம் இவர்களிடம் Video Recording" இல்லை. இருந்திருந்தால் யார் உண்மை பேசுகிறார்கள்? யார் பொய் பேசுகிறார்கள் என்பது தெரிந்துவிடும்.
இவர்களின் குற்றச்சாட்டுகளில் ஒன்று: தலைவி எதற்கும் உடன்படாததால் துபாய் காயல் நலமன்ற நிர்வாகிகள் மனம் வெறுத்துப் போய்விட்டார்கள்" என்பது.
அதே துபாய் காயல் நலமன்ற நிர்வாகி சகோ., சலீம் சொல்வது,
"எல்லா முயற்சிகளும் எடுத்தும், உறுப்பினர்கள் கூறிய அனைத்து நிபந்தனைகளுக்கும் நகர்மன்றத் தலைவி சம்மதம் தெரிவித்த பிறகும், உறுப்பினர்கள் அதனை ஏற்றுக்கொள்ளாது, கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வதில் காட்டிய ஆர்வம் தான் எனக்கு மன உளைச்சலைத் தந்தது". என்பது.
ஊரில் குடிநீர் ஒரு பெரும் பிரச்சனையாக உள்ள இந்த கால கட்டத்தில் இவர்களுக்கு "Media & video" பெரும் பிரச்சனையாக உள்ளது. "When Rome was burning Nero was fiddling "
கடந்த December இல்தான் இவர்கள் அனைவரும் ஒத்துக்கொண்டு வீடியோ எடுக்க தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள். கடந்த January, February, March & April மாதக் கூட்டங்களில் ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை. திடீரென்று இவர்களில் பலருக்கு Media & video வினால் பிரச்சனை எழலாம் என்ற ஞானோதயம் ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் மீடியா உள்ளே வரக்கூடாது, வீடியோ எடுக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு, வெளியூர் மீடியாவை பூவும், தண்ணீரும் வைத்து அழைத்துள்ளார்கள். உள்ளூர் மீடியாவையும், வீடியோவையும் கண்டால் இவர்களுக்கு ஏன் இந்த அலர்ஜி? ஏன் இந்த தடுமாற்றம்? ஏன் இந்த பயம்?
" மடியில் கனமிருந்தாய் வழியில் பயமிருக்கும்" என்ற பழமொழிதான் மீண்டும் நினைவிற்கு வருகிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross