மின்சார பயனீட்டு அட்டவணை posted byS.A.Muhammad Ali (Dubai)[15 September 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22182
மின்சாரத்தை தொட்டால் ஷாக் அடிக்கும் என்று தெரியும். ஆனால் இப்பொழுது மின்சார வாரியத்தின் பில்லை பார்த்தாலே ஷாக் அடிக்கிறது.
மின்சார நிலைய ஊழியர்கள் எங்கள் வீட்டில் அட்டையில் மின்சார அளவீட்டை குறிப்பிடாது வெறும் தொகையை மட்டுமே ஒரு துண்டு சீட்டில் எழுதி கொடுத்து செல்கிறார். இதனால் பழைய அளவு எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியவில்லை. நமது பெண்களுக்கு இதை பற்றி முறையான விளக்கம் அளிக்க வேண்டுமாறு கேட்டு கொள்கிறேன்.
இதற்கு ஒரு சார்ட் ஒன்று பிரிண்ட் செய்து மின்சாரவாரியம் கட்டணங்களை அளவிடும் முறை, 5 நாட்களுக்கு ஒருமுறை மின்சார உபயோகத்தின் அளவீடு ஆகியவற்றை நோன்பு கால அட்டவணை போன்று வியாபார நிறுவனங்கள் விளம்பரத்துடன் விநியோகித்தால் நல்லது. பெண்கள் தங்கள் வீட்டில் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை எவ்வளவு ரீடிங் உபயோகித்து இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு தங்களது பட்ஜெட்டிற்குள் மின்சாரத்தை சிக்கனமாக உபயோக படுத்தி கொள்வார்கள்.
நாளுக்கு நாள் உயரே பறந்து விண்ணை முட்டும் விலைவாசியில் நடுத்தர குடும்பத்தினர் படும் பாடு சொல்லி மாளாது.
வீடுகள் அமைக்கும் போது நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் வரும்படி ஜன்னல்கள் அமைப்பதால் பகலில் மின்சாரம் பெருமளவு மிச்சப்படுத்தலாம்.
தண்ணீரை சிக்கனமாக செலவளிப்பதன் மூலம் அடிக்கடி நிலத்தடி நீரை டாங்கிற்கு பம்ப் செய்ய வேண்டிவராது மின்சாரம் சிக்கனமாகும்.
நீண்ட நேரம் கழித்து தான் மீண்டும் உபயோகப்படுத்துவோம் என்றால் டிவி,டிஷ் ரிசீவர்,கம்பியூட்டர்,டி.வீ.டி பிளேயர் போன்றவற்றை Stand-by யில் வைக்காமல் பவர் ஆஃப் செய்து விடவும்.
தேவைப்படும் இடங்களில் தேவைப்படும் நேரம் மட்டும் விளக்குகள், ஃபேன்கள் பயன் படுத்த வேண்டும்.
மின்சாரத்தில் இயங்கும் எந்த பொருளும் அது மின்சாரத்தை சிக்கனமாக பயன் படுத்தக் கூடியது தானா என பார்த்து வாங்க வேண்டும்.
எல்லா பொருட்களிலும் அதன் மின் செலவை Watts அளவில் குறிப்பிட்டிருப்பர்கள். அதை படித்து புரிந்து கொள்ள வேண்டும் ஒரு Watts என்பது ஒரு மணி நேரம் அது செலவளிக்கும் மின்சக்தியின் அளவு. எந்த கருவி எவ்வளவு சக்தி செலவளிக்கும் என தெரிந்து கொள்ளலாம்.
நன்றி வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross