செய்தி: நகர்மன்ற சமாதான முயற்சிகள் குறித்து ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை சலீம் - காயல்பட்டணம்.காம் இணையதளத்திற்கு தந்த பதில்கள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Now the ball is in chairperson's court posted bySaalai.Abdul Razzaq Lukman (Kayalpatnam)[16 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22200
சாளை சலீம் காக்கா அவர்களுக்கு,
உங்கள் பதிலின் கடைசி பாராவை நீங்கள் மீண்டும் வாசியுங்கள்.
நகர்மன்றத் தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் நான் கூறிக்கொள்ள விரும்புவது - நீங்கள் யாரையும் மத்திஸ்தம் செய்ய எதிர்பார்க்காதீர்கள். நீங்களே ஒன்றாக அமர்ந்து, நடந்தவற்றைப் பற்றி பேசாமல், நடக்க வேண்டியவை குறித்து பேசி, சுமுக சூழலை உருவாக்குவதே சிறந்த வழி என நான் கருதுகிறேன். இந்த கருத்தையே நான் நகர்மன்றத் தலைவியிடம் இறுதியாக தெரிவித்துவிட்டு வந்தேன். அவர்களும் அதனை முழுவதுமாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள். Now the ball is in members court. எல்லாம் வல்ல அல்லாஹ், நம் நகராட்சியில் சுமுக சூழலை உருவாக்கி, நமது நகராட்சி, பிற நகராட்சிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ அருள் புரிவானாக. ஆமீன்.(cut & paste)
நீங்கள் கூறியது போல் நகரமன்ற உறுப்பினர்கள் முன்பு முயற்சி எடுத்ததற்கு, தலைவி சொன்னதாக 1 வது வார்டு உறுப்பினர் லுக்மான் காக்கா அவர்கள் தெரிவித்த, இந்த வலயதலத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை( news ID 8861)
உறுப்பினர்களுடன் பழகியது குறித்து :
உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை பெற்ற பிறகு எல்லா உறுப்பினர்களுடன் ஒன்றாக அமர்ந்து பேச மாட்டேன், வேண்டுமானால் தனித்தனியாக பேசத்தயார் என்று கூறினீர்கள். இப்போது வசதியாக ஒன்றாக அமர்ந்து பேச மாட்டேன் என்று சொன்னதை மறைத்து விட்டு கூறுகிறீர்களே ஏன்? தனித்தனியாக அழைத்து பேசுவது தான் TEAM WORK ஆகுமோ? ஏன் இந்த பிரித்தாளும் சூழ்ச்சி.
இந்த சந்திப்பின் போது கவுன்சிலர்கள் எல்லோர்களும் லஞ்சம் வாங்க முடியாமல் போனதால் தான் எல்லோர்களும் ஒன்று சேர்ந்திருக்கிறீர்கள் என்று ஆவேசமாக ஒட்டுமொத்தமாக எல்லோர்கள் மீதும் பழி சுமத்தினீர்களே? இது உண்மை தானா? என்று உங்கள் மனசாட்சிக்கும,; இறைவனுக்கும் நன்கு தெரியும் தானே? (copy & paste)
. துணைக் குழுக்கள் அமைத்திட முயற்சி :
தலைவி அவர்களே, துணைக்குழுக்கான ஆலோசனைக் கூட்டத்தை 12-வது வார்டு உறுப்பினர் சுகு அவர்கள் வீட்டில் நடத்த தலைவி ஆகிய நீங்களும் சேர்ந்து தான் ஆர்வத்துடன் முடிவெடுத்து விட்டு, மற்றவர்கள் கூறினர் என்று சொல்லியிருக்கிறீர்கள். இப்படி முடிவெடுத்த மறுநாள், தலைவி ஆகிய நீங்கள் எனக்கு போன் செய்து சுகு வீட்டிற்கு வர முடியாது, உங்கள் வீட்டில் நடத்தலாம் என்றீர்கள். அதற்கு நான், உங்கள் வீட்டிற்கு வரமாட்டோம், எங்கள் வீட்டில் கூட்டத்தை நடத்துவோம் என்று சுகு அவர்களிடம் தடாலடியாக என்னால் சொல்ல இயலாது. வேண்டுமானால் நகர்மன்றத்தில் நடத்தலாம் என்று கூறி அதன்படி நடந்தது.
அப்படி குழுக்கள் அமைப்பது பற்றி ஆலோசனையிலும் கூட, குழுக்கள் அமைத்தாலும் நான் சொல்வதுபடி தான் முடிவெடுக்க வேண்டும். அந்த குழுக்களுக்கு அதிகாரம் இருக்கக் கூடாது என்று TEAM WORK முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டீர்கள். இப்போது உறுப்பினர்கள் ஒத்துழைக்கவில்லை என்ற பொய்யான குற்றச்சாட்டை கூறுகிறீர்கள். (copy & paste)
இறுதியாக உங்களைப்போல் தான் நாங்களும் கூறுகிறோம். உறுப்பினர்களின் உதவியோடு ஒன்றிணைந்து செயல்படுவோம், வாருங்கள் என்று. ஆனால் நீங்கள் தான் உறுப்பினர்கள் ஒன்றிணை வேண்டாம். தனித்தனியாக என்னிடம் ஆலோசனை கூறுங்கள் என்கிறீர்கள்.
தலைவி அவர்களே! இன்னும் காலங்கள் இருக்கிறது. உறுப்பினர்களை அரவணைத்து அவர்களும் உங்களைப் போல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் என்று மதித்து, அவர்களின் நல்ல ஆலோசனைகளை ஏற்று கூட்டாக செயல்பட்டு நல்ல நிர்வாகத்தை மக்களுக்கு அளிக்க முன்வாருங்கள். (copy & paste)
Now comment, ball is in whose court?. Certainly in Chairperson's court.
தலைவி மட்டுமல்ல அனைத்து உறுப்பினர்களும் ( ஒரு பெண் உறுப்பினர், போட்டியின்றி) மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்க பட்டவர்கள் தான். அதனால் உறுப்பினர்கள் பெரியவர்களா அல்லது தலைவி பெரியவரா என்று EGO பார்க்காமல் ஊருக்கு நன்மை செய்யுங்கள். அப்படி உங்களின் (உறுப்பினர்கள் & தலைவி) ego பார்த்து மக்களுக்கு நன்மை செய்யாவிடில் மக்களும், அல்லாஹ்வும் மன்னிக்க மாட்டான்.
இந்த நகரமன்றம் அமைந்ததில் இருந்து பலர் , கமெண்ட்ஸ் பதிவு பண்ணும் போது, ஒருவரை, pay master என்றும் சென்னை எஜமான் என்றும் ring master என்றும் மூடகமாக கருத்து தெரிவிக்கின்றனர். ஆதாரம் இல்லாமல் அப்படி பதிவு செய்திருக்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால் அப்படி அந்த நபரை, ஊரை ஆட்டுவிக்கும் நபரை, pay master of members, சென்னை எஜமானரை, பெயரை குறிப்பிட்டு அடையாளம் காட்டினால், என்னை போன்றவர்கள், அந்த கருப்பு ஆட்டை தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும். இந்த பதிவின் மூலம் என்னை போன்றோருக்கு அப்படி கமெண்ட்ஸ் பதிவு செய்தவர்கள் பதில் தருவார்கள் என்று
நம்புகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross