Re:... posted byNMZ.Ahamedmohideen (KAYALPATNAM)[22 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22385
கல்லாமை ,இல்லாமை ,இயலாமை யை காயலைவிட்டே விரட்டி காயலரின் கண்ணீர் துடைப்போம் ,என்ற உறுப்பினர்களின் ஆக்கத்தினாலும், ஊக்கத்தினாலும் உத்வேகத்துடன் களப்பணிகளாற்றி 'இந்த நற்பணி மன்றத்தின் மிகப்பெரும் நேர்த்தியான நலப்பணிகள் அனைத்தையும் கண்ணுற்று சுபுஹானல்லாஹ் ! மாஷா அல்லாஹ் ! உண்மையிலேயே அல்லாஹ்வை புகழ்ந்தவனாக உங்களை பாராட்டுகிறேன்' .
நமது காயல்
நகர் மக்களின் தேவை அறிந்து அவர்கள் மீது கருணை காட்டும் நீங்கள், நிச்சயம் அல்லாஹ்வின் கருணையை பெறுவீர்கள் , 'மக்களிடம் கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ்வும் கருணை காட்ட மாட்டான்' என்ற நபி போதனையை நினைவில் கொண்டு இது போன்ற பொதுநல சேவைகள் மூலம் உங்கள் நேரத்தை இறை வழிபாட்டிலேயே கழிக்கிறீர்கள் என்பதை நினைத்து நினைத்து கண்களில் ஆனந்தக்கண்ணீர் வழிகிறது .
யாழ் இனிது குழல் இனிது என்பார் மழலை மொழி கேளாதார் எனும் கூற்ரிர்க்கொப்ப பிஞ்சுகளின் கண்குளிர்ச்சியான பல்சுவை நிகழ்ச்சிகள் இந்நிகழ்வை அசத்தி விட்டன .மாஷா அல்லாஹ்!
மாஷா அல்லாஹ்!மன்றம் என்றால் இதுவல்லவா மன்றம் ..... ! ஈன்று எடுத்த மாதா,பிதா களுக்கு மாண்பு சேர்க்கும் மகத்தான மழலைகள் . ஜித்தா காயல் நல மன்றம் வையத்துள் வாழ் வாங்கு வாழ வேண்டும் .வாகான ஜித்தா காயல் நல மன்றத்தின் சேவைகள் தொய்வின்றி துலங்க வேண்டும் . தொடரவேண்டும் . நிகழ்வுகளும் சுவையான நிகழ்வு !சாப்பாடும் சுவையான சாப்பாடு !! ஜித்தா காயல் நல மன்றத்தினர்கள் அனைவருக்கும் அகங்கனிந்த அன்பின் வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross