Re:... posted bymackie noohuthambi (kayalpatnam)[24 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22392
தமிழகத்தை இந்தியாவில் முதன்மை மாநிலமாக ஆக்கபோகிறேன் என்று புரட்சி தலைவி அவர்கள் சொன்னது ஞாபகம் இல்லையா. பெரிய பெரிய அறிஞர்களெல்லாம் மின்சார ஒளியிலா கல்வி பெற்று மேன்மக்கள் ஆனார்கள். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்றார்கள். ஒவ்வொரு ஏழை வீட்டிலும் மண் எண்ணை விளக்கு தானே இருக்கிறது.
கொஞ்சம் பொறுங்கள். 2014 இலே இந்த நாட்டின் பிரதம அமைச்சராகும் வாய்ப்பு நமது முதலமைச்சருக்கு இருக்கிறது. அப்போது நாட்டில் எல்லா மக்களுக்கும் இலவச இன்வேர்டர் வழங்குவார்கள் .அப்போது மின்சாரம் பற்றிய கவலை நீங்கிவிடும். வேறு வழியில் மின்சாரம்தான் வேண்டும் என்றால் எப்படி?. கூடங்குளத்தில் மின்சார உற்பத்தி செய்ய மக்கள் எதிர்க்கிறார்கள். . மின்சாரம் தாக்கி எத்தனையோ பேர் அடிக்கடி உயிர் இழக்கிறார்கள். மின்சார திருட்டு பல ஆயிரம் கோடிக்கு நடைபெறுகிறது. இதற்கெல்லாம் ஒரே வழி மின்சாரத்தையே இல்லாமல் ஆக்குவதுதான்.
புரட்சி தலைவி அம்மா வியூகம் வகுத்தால் அது சரியாகத்தான் இருக்கும்."நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான், துணிச்சலை மனதிலே வளர்ப்பவன் நான் நான்" என்று அவர்கள் ஆசான் பாடுவது காதில் விழுகிறதா..... ஆளை விடுங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross