வானில் வட்டமிடும் கழுகுக் கூட்டங்கள்....! posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[27 September 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22443
அன்பு நண்பர் ஷமீம் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்,
தங்கள் கட்டுரையை நிதானத்தோடு படித்துப் பார்த்தேன். தாங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்தும் இக் காலத்தின் சூழ்நிலையில் கட்டாயம் நாம் கடைபிடிக்க வேண்டியவை தாம். கழுகுக் கூட்டம் வானில் வட்டமிட, கோழிக்குஞ்சுகள் கொரித்துக் கொண்டிருக்கும் நிலை தான் நம்மவர் நிலை! எந்நேரமும்,எக்காலமும் ஆபத்தை எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் இஸ்லாமியர்களின் உயிர் நாடியான நம்பிக்கையை (ஈமானை) சீண்டிப் பார்க்க பல விதமான வியூகங்கள் அமைக்கும் எஹூதி நசராக்களின் சூழ்ச்சி தான் இத் திரைப்படமும் அதன் உரிமையாளர்களும்!
நபி பெருமானார் அவர்கள் மீது உலகின் ஒட்டுமொத்த இஸ்லாமியர்கள் வைத்துள்ள நேச,பாசத்தை விட பல்லாயிரம் மடங்கு அதிகமாக அல்லாஹ் தன் ஹபீபான ரஸூல் மீது வைத்துள்ளான். முற்பகல் செயின் பிற்பகல் விளையும் என்பது பழமொழி! அல்லாஹ் நாடினால் அவர்களது நாடி நரம்புகளைச் சுண்டி இழுத்து ஓர் மூலையில் முடங்கச் செய்திடுவான்.
பெருமானாரை இகழ்ந்தவர்களின் கதி இவ்வுலகிலேயே நாம் கண்கூடாகப் பார்த்து வருகின்றோம். நிம்மதியாக அவர் யாரும் நடமாடக் கூட இயலாமல் மரண பயத்தால் வெளியில் தலை காட்ட இயலாமலும் உள்ளனர். இதுவே உண்மை! அல்லாஹ் போதுமானவன்,
சரி,நண்பரே இனி ஒரு சிட்டுக் குருவியை எப்ப பறக்க விடப் போகின்றீர்? எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இன்ஷா அல்லாஹ்...! அல்லாஹ் நாடினால் எமது மனக்கிளைகளில் உமது சிட்டுக் குருவி நிச்சயம் வந்து உட்காரும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross