Re:...பயணம் posted bymackie noohuthambi (kayalpatnam)[28 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22477
மதுரை கொழும்பு பயணம் பற்றிய தகவல் சுவையானது. நமதூர் மக்கள் நிழல்படங்களுடன் வெளிவந்திருக்கும் செய்தி இனியது.
இலங்கை இந்திய நல்லுறவுகள் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. குறிப்பாக தமிழகத்தின் இஸ்லாமிய தலைநகராக விளங்கிய காயல்பட்டினத்தில் இருந்துதான் ஆன்மீக மணம் இலங்கைக்கு நமது முன்னோர்களால் எடுத்து செல்லப்பட்டு அங்கு தென்றலாய் தவழ்ந்து வந்தது.. புத்த மதமும் இந்தியாவிலிருந்துதான் அங்கு அறிமுகம் செய்யப்பட்டது. அங்குள்ள மலை நாட்டுக்கு நமது தமிழ் மண்ணிலிருந்துதான் தோட்டத் தொழிலாளர்கள் சென்று அவற்றை சோலை வனங்களாக மாற்றினார்கள். ஆதம் நபி அவர்கள் அங்கே இறங்கியதாக வரலாறுகள் தரும் செய்தி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழிக்கு உயிரூட்டியவர்கள் காயல்பட்டினம் மக்கள். தமிழ் இலக்கியங்கள் இங்கிருந்துதான் அங்கு சென்று பல தமிழ் அறிஞர்களை உருவாக்கியது.
எனவே கால சக்கர சுழற்சியில் ஒரு குடும்பத்தில் சகோதரர்கள் சண்டை போட்டுக்கொள்வது போல் சகோதர யுத்தங்கள் அவ்வப்போது நடந்து வந்தது. ஆனால் ஒரு தந்தை அந்த சண்டையை நான்கு சுவர்களுக்குள் தீர்த்து வைக்காமல் வெளியே கொண்டுவந்ததால், ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல் கூத்தாடிகள் பிரித்து வைத்து வேடிக்கை பார்க்கிறர்கள்.
இந்த நிலை வெகு விரைவில் மாறும். மீண்டும் நாம் எல்லோரும் சகோதர பாசத்துடன் வாழும் காலம் விரைவில் வரும் என்பதை கட்டியம் கூறும் விதமாகத்தான் மதுரை கொழும்பு விமான சேவை ஆரம்பமாகியுள்ளது. விமான நிறுவனத்தினர்களுக்கும் , விமானத்தில் கன்னி பயணம் மேற்கொண்ட நமதூர் மக்களுக்கும் இந்திய தமிழக அரசுக்கும் வாழ்த்துக்கள்.
புரட்சி தலைவி அவர்கள் கொடி அசைத்து ஆரம்பித்து வைத்திருக்க வேண்டிய நிகழ்ச்சி. அரசியல் காழ்ப்பு உணர்ச்சிக்கு சாமரம் வீசிக்கொண்டிருப்பவர்களின் விமர்சனத்துக்கு பயந்து அவர்கள் அப்படி செய்வதை தவிர்த்திருக்கிறார்கள்.
மயிலாட வான்கோழி தடை செய்வதோ- மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ- முயல்கூடம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ- அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ-நெருப்புக்கும் புயலுக்கும் தடை போடவோ .... செந்தமிழே நீ பகை வென்று முடிசூடிவா ....என்று வாழ்த்துகிறோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross