Re:...சிரமங்களை சந்திக்க வேண்டியதில்லை ! posted byM.S.Kaja Mahlari (Singapore)[28 September 2012] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 22497
மகிழ்ச்சியான செய்தி! பேசாம மதுரை to சிங்கபூர் என ஒரு பிளைட் உட சொல்லுங்கள். மிகவும் வசதியாக போகிவிடும். திருவனந்தபுரம் சென்று கஷ்டப்பட, சிரமப்பட தேவையில்லை. தென்தமிழ் நாட்டு தமிழர்களுக்கென தனிவிமான நிலையம் வேண்டும். அதனை மதுரை விமான நிலையம் நிறைவேற்றி தரவேண்டும்.
ஒரு சமயம் ஊரிலிருந்து சிறிலங்கா கொழும்பு செல்லும்போது, திருவனந்தபுரம் வழியாக சென்றேன். அப்போது போர்டிங் பாஸ் வாங்கிவிட்டு இமிக்ரேசன் வரிசையில் நிற்கும்போது எனது முறை வந்தது. எனது பாஸ்போட்டை வாங்கி என்னையும் எனது தொப்பி, தாடியையும் பார்த்துவிட்டு, பாஸ்போட்டையும் மாறி, மாறி பார்த்த அந்த மலையாளி அதிகாரி, நீ என்ன? சென்னை மூலம் போகாமல் இவிடம் வந்து போகிறாய்? என்றான். அவனிடத்தில், நான் ஒரு இஸ்லாமிய மதகுரு... (Priest) இலங்கையில் ஒருபள்ளியில், அரபி பாடசாலையில் பேராசிரியராக இருக்கிறேன். லீவில் ஊர் வந்து மீண்டும் இலங்கை செல்கிறேன். அங்குள்ள நிர்வாகம் எனக்கு திருவனந்தபுரம் பக்கம் என்பதினால் இங்கு எனக்கு டிக்கெட் எடுத்து தந்துள்ளார்கள் என்றேன். ஆனால் அவன் என்னை விடவில்லை. தொப்பியும், தாடியும் அவனை வித்தியாசமாக பார்க்க வைத்தது. மீண்டும் என்னை கிண்ட ஆரம்பித்தான்.
ஆகா! இதற்குமேல் அமைதியாக இருந்தால் சரிவராது என ஆரம்பித்துவிட்டேன். அமைதியாக அவனிடத்தில் ஏன் சார் ஒரு இந்திய பிரஜை அவர் சார்ந்த மாநிலத்தின் மூலம்தான் விமான பயணம் போக, வர வேண்டும் என்று எதாவது விமான போக்குவரத்து சட்டங்கள் ஏதும் உண்டா? என கேட்டேன். ஏது சாரே! எந்தா அதிகம் சம்சாரிக்குது? என்றான். இல்லை உனது இந்த அதிக விசாரணைதான் என்னை இப்படி கேட்க வைத்துள்ளது என்றேன்.
மீண்டும் ஏதோ ஒன்றை கேட்க வந்தவனை கேட்கவிடாமல், ஏன் சாரே! சென்னை விமான நிலையம் மூலம் எத்தனை மலையாளிகள் வந்து, போகிறார்கள் என்ற கணக்கு உனக்கு அறியுமோ! என்று கேட்டேன். அவனின் முகத்தில் ஈ ஆடவில்லை. இஞ்சி தின்ற குரங்காக முழித்துவிட்டு, கோபமாக பாஸ்போர்ட்டில் சீலை அடித்துவிட்டு சரி, சரி போய்க்கோ என விரட்டி அனுப்பினான்.
ஆக மதுரை விமான நிலயத்தில் இந்த வசதிகள் வந்து விட்டால் இவ்வித சிரமங்களை சந்திக்க வேண்டியதில்லை !
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross