Re:...பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய KATTURAI posted bymackie noohuthambi (kayalpatnam)[30 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22529
காலத்துக்கு தேவையான கட்டுரை. காய்தல் உவத்தல் இன்றி எழுதியிருக்கிறீர்கள். சொந்த பந்தங்களிடம் சொல்லிவிட்டு தாம் செய்த குற்றங்களுக்கு அவர்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டு செல்ல வேண்டும் என்ற செய்தி எல்லோரும் கவனிக்க வேண்டியது
பள்ளிவாசலிலே ஒரு கடிதம். அதை பள்ளிவாசல் ஜமாஅத் தொழுகைக்கு போகிறவர் மட்டும்தான் பார்க்க முடியும்.
"நானும் எனது மனைவியும் இந்த வருஷம் புனித ஹஜ்ஜு கடமையை நிறைவேற்ற, ஊரிலிருந்து இன்ன தேதியில் இன்ன ரயிலில் புறப்படுகிறோம். நங்கள் உங்களில் யாருக்காவது நாவாலோ கையாலோ தவறுகள் செய்திருந்தால் அதை அல்லாஹ் ரசூலுக்காக மன்னித்துக்கொள்ளுங்கள், எங்கள் ஹஜ் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக நாங்கள் திரும்பிவர து ஆ செய்யுங்கள்." இது ஒரு அச்சடிக்கப்பட்ட கடிதம். பல xerox காப்பி எடுத்து எல்லா பள்ளிகளிலும் தொங்கவிடப்பட்டிருப்பதை பார்க்கிறோம். இப்படி செய்வதால் செய்த பாவங்களை சம்பத்தப்பட்டவர்கள் மன்னிப்பார்களா? நேரில் போய் மன்னிப்பு கேட்டால், பாதிக்கப்பட்டவர் தனது உள்ள கொதிப்புக்களை கொட்டி தீர்ப்பார். இவர் அழுகை, அவர் அழுகை இவற்றைபார்த்து பக்கதிளிர்ப்பவர்கள் அழுகை, வானவர்கள் இவர்கள் அழுகையை அல்லாஹ்விடம் சமர்ப்பிக்க, அவற்றுக்கு அல்லாஹ் அங்கீகாரம் அளிக்க..... மன்னிப்புகள் கிடைக்கும். இதயங்கள் இன்ப மழையில் நனையும். அவர்கள் ஹஜ் கபூலாகும். இந்த உண்மையை ஒவ்வொரு ஹாஜிகளும் அறிந்திருக்க வேண்டும்.
PRESTIGE பார்த்து அவர்கள் வீட்டுக்கு எப்படி செல்வது என்று வெட்கத்துடன் அல்லது இறுமாப்புடன் சென்றால், நாம் எழுதும் கடிதங்கள் அல்லாஹ்வின் குப்பை கூடைக்கு போகுமுன், நாம் பாமாலை பாடி, பூமாலை சூடி புறப்பட்டு போன அடுத்தநாளே அது பள்ளிவாசல் குப்பை கூடையில் போடப்பட்டு சாக்கடையில் கலந்து விடும். அல்லாஹ் எல்லோருடைய ஹஜ்ஜையும் கபூல் செய்வானாக.
ஊர் ஒற்றுமை பற்றி ஆசிரியர் எழுதியுள்ளார்.காருதில் கொள்ள வேண்டிய மற்றொரு செய்தி.
." இன்னல்லாஹா லா யுகய்யிறு மா பி கவ்மின் ஹத்தா யுகய்யிறு மா பி அன்புசிஹீம்" என்று ஒரு திருமறை வசனத்தை உலமாக்கள் சொல்கிறார்கள்." ஒரு சமுதாயம் அவர்கள் நடத்தைகளை மாற்றிக்கொள்ளாத வரை அல்லாஹ்வும் மாற்றிவிடுவதில்லை " என்று ஒரு கருத்தை சொல்கிறார்கள். ஒவ்வொரும் தனது அகீதாவில் இவர் சேர வேண்டும் என்று ஒருவருக்கு ஒருவர் து ஆ கேட்கிறார்களே தவிர எல்லோரும் ஒன்று பட்டு செயல்பட அல்லாஹ்விடம் து ஆ கேட்பதாக தெரியவில்லை.இந்த நிலை மாறி எல்லோரும் முஸ்லிம்கள் என்ற தொனியில் து ஆ கேட்கும்போதுதான் அல்லாஹ்வும் அவனது ரசூலும் சந்தோசப்படுவார்கள். அல்லாஹ் தவ்பீக் செய்வானாக. லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்...........
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross