இது விவாதமல்ல....வாதம்! posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[03 October 2012] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22594
தட்டுப்பாடு என வரும்போது கட்டுப்பாடு விதிப்பது இயல்பு! இதில் நாம் அரசாங்கத்தைக் குறை கூறி என்ன பயன்? சமையல் எரி வாயு உபயோகிப்போர் எண்ணிக்கை கூடுகின்ற போது உற்பத்தியையும் கூட்ட வேண்டும். அதற்குரிய வழிமுறைகளை அரசு செயல்படுத்த முன் வர வேண்டும். பற்றாக்குறை இருப்பின் உலக உற்பத்தி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து அதன் சுமையை பொது மக்களின் முதுகில் சுமத்தி பொதி சுமக்கும் கழுதைகளாக்காமல் இருந்தால் நலம்.
நான் பணியாற்றும் இடங்களில் பொதுவாக இலங்கையைச் சார்ந்தவர்கள் எப்போதும் சில தம்பட்டம் அடிப்பது வழக்கம். அதை நான் பெரிது படுத்துவதில்லை. “என்னப்பா ஊரு இது ?உங்கடெ தமிள் நாட்டுலெ தண்னி இல்லையா? ஸ்ஸொ....எங்க நாட்டை சொல்லி வேலையில்லை. அப்படி ஒரு தண்ணி கிடைக்கும். கரண்ட்டுக்கு மிச்ச பிரச்சனையா? எங்கடெ கெண்டி, கொழுபுலெ பாருங்க பார லைட்டு தான்...! பகலைலெ கூட எரியும்! என்ன இந்தியாப்பா உங்கடெ இந்தியா...? இன்னும் இப்படி எழுதிக் கொண்டே போகலாம்.
சரி, அது அவர் இந்தியாவை சரி வர விளங்காமல் சொல்கிறார்! மக்கி காக்கா சொல்வதைத் தான் என்னால் ஜீரனிக்க இயலவில்லை! இலங்கை என்பது தமிழ் நாட்டில் பாதி அளவு கூட கிடையாது. அதையும் இந்தியாவையும் ஒப்பிடுவது முறையல்ல. அங்குள்ள மக்கள் தொகைக்கு கரண்ட்.தண்ணீர், சமையல் எரி வாயு போதுமானதாக இருக்கும். நூறு கோடியைத் தாண்டும் நம் இந்தியாவுக்கு தேவையும், பயணாளிகளும் அதிகமாக உள்ளது. காஸ் சிலிண்டர் வர இலங்கையில் ஐந்து நிமிடமாகின்றது. அப்படி பார்ர்த்தால், இங்கே சவூதி அரேபியாவில் ஃபோன் போடக் கூடத் தேவையே இல்லை! மீன் விற்கிற மாதிரி தெருத் தெருவா காஸ் சிலிண்டரை ஸ்பேனரை வைத்து டிங்..டிங்..டிங்...என தட்டி ஓசை எழுப்பி கூவி விற்கின்றார்கள்.
எனவே, இத்துனூனண்டு(தம்மாத் துண்டு) இலங்கையை நம் அகண்ட பாரதத்தோடு ஒப்பிடுதல் ஏற்புடையதல்ல!
-ராபியா மணாளன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross