விலைமதிக்கவியலா மாணிக்கத்தை இழந்துள்ளோம்... posted byS.K.Salih (Kayalpatnam)[05 October 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22626
விலை மதிக்கவியலாத மாணிக்கத்தை - நகரின் ஒரு சிறந்த பெண்மணியை - பெண்களுக்கெல்லாம் முன்னோடியாக வாழ்ந்த நல்லதொரு தாயை இழந்துள்ளோம்...
வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் பாவப் பிழைகளைப் பொருத்தருளி, அவர்களின் நற்கருமங்களை கபூல் செய்து, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில் - நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் அவர்களையும், நம்மையும், நம் குடும்பத்தின் மூத்த மர்ஹூம் - மர்ஹூமாக்களையும் சேர்த்தருள்வானாக ஆமீன்.
எனது சிறுபிராயத்தில், நான் திருமறை குர்ஆனைப் பார்த்து ஓதி முடித்தபோது... பாராமல் ஓத மத்ரஸாவில் இணைந்தபோது... போன்ற முக்கியமான தருணங்களிலெல்லாம் - என் தாயார் மற்றும் அவர்களின் மூத்த சகோதரியான என் பெருமா ஆகியோரால் சில பெரிய மனிதர்களின் துஆக்களைப் பெற்றிடுவதற்காக அழைத்துச் செல்லப்படுவேன்... அவ்வாறு நான் என் பிஞ்சுப் பருவத்திலேயே சந்தித்த ஒரு மகத்தான பெண்மணிதான் இந்த தாயார் அவர்கள். அந்நேரங்களிலெல்லாம் என்னைப் பார்த்து - “உனக்கு என் மச்சானின் பெயர்தான் சூட்டப்பட்டுள்ளது... அவரைப் போல வரனும்” என்று அறிவுரை வழங்குவார்கள்.
தன் வாழ்வில் யாரையும் கடிந்து பேசி கேள்விப்பட்டதில்லை...
தன் சரீரம் - உடை - உறைவிடம் அனைத்திலும் அக்மார்க் சுத்தத்தைப் பேணியவர்கள்...
தமது கடைசி காலம் வரை தன் கடமைகளை தானே செய்தவர்கள்...
குடும்பங்கள் - சுற்றுவட்டாரங்களில் ஏற்படும் சிறிய - பெரிய பிரச்சினைகள் எல்லாம், இப்பெண்மணியின் ஒரு சொல் அன்புக் கட்டளையில் காணாமல் போகும்.
இதுபோன்ற அரிய - பெரிய மக்களோடெல்லாம் இணைந்து வாழ வாய்ப்பற்றுப் போவதுதான் நமது நஸீப் (கொடுப்பினை) போலும்! இதுபோன்ற நற்குணத்தின் உறைவிடங்கள் கொஞ்சங்கொஞ்சமாக மறைந்து வரும் இக்காலகட்டத்தில், தற்கால முதியவர்கள்தான் இதுபோன்ற பெரிய மக்களின் குணத்தைத் தமக்குள் ஏற்று, நமக்கு வழிகாட்ட வேண்டும்...
அல்லாஹ் அதற்கு கிருபை செய்வானாக, ஆமீன்!
இந்நேரத்தில், மனதுக்குக் கஷ்டமான இன்னொரு செய்தி! மர்ஹூமா அவர்களின் நெருங்கிய சொந்தக்காரரும், என் அன்பு நண்பன் மவ்லவீ ஹாஃபிழ் ஓ.எல்.நூஹ் ஸிராஜுத்தீன் அவர்களின் தந்தையுமான ஹாஜி உமர் லெப்பை அவர்களும், ஒரே தினத்தில் - ஒரே மருத்துவமனையில் வஃபாத்தாகி, ஒருநாள் முன்பாக (நேற்று) அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
அனைவரோடும் அன்பாகப் பழகிய - நல்ல மக்களை நமதூருக்குத் தந்த அந்த நல்ல பெருமகனாருக்கும் அல்லாஹ் மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை வழங்கியருள்வானாக, ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross