காயல்பட்டினம் தீவுத்தெரு பெண்கள் தைக்காவில் இயங்கி வரும் அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் மூத்த கண்காணிப்பாளர் ஹாஜ்ஜா என்.கே.செய்யித் ராபியா, நேற்று காலை 10.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 90.
அன்னார், மர்ஹூம் கா.தி.முஹம்மத் நூஹ் என்பவரின் மகளும்,
மர்ஹூம் உ.ம.முஹம்மத் மீரா ஸாஹிப் என்பவரின் மனைவியும்,
குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் நிர்வாகிகளுள் ஒருவரான மர்ஹூம் ஹாஜி என்.கே.காதிர் ஸாஹிப், மர்ஹூம் ஹாஜி என்.கே.மொகுதூம் முஹம்மத், மர்ஹூம் ஹாஃபிழ் என்.கே.முஹம்மத் லெப்பை, மர்ஹூம் ஹாஜி என்.கே.முஹம்மத் ஜமீல் ஆகியோரின் சகோதரியும்,
‘சுலைமானிய்யா கார்ப்பரேஷன்’ ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல், எஸ்.ஏ.ஷெய்கு சுலைமான் ஆகியோரின் பெரிய தாயாரும்,
ஹாஜி எஸ்.எச்.முஹம்மத் நூஹ் என்பவரின் சிறிய தாயாரும்,
ஹாஜி கே.எஸ்.முஹம்மத் நூஹ், ஹாஜி கே.எஸ்.அப்துர்ரஹ்மான், ஹாஜி கே.எஸ்.மொகுதூம் முஹம்மத், மவ்லவீ ஹாஃபிழ் கே.எஸ்.கிழுறு முஹம்மத் ஃபாஸீ, ஹாஜி எம்.எல்.முஹம்மத் யூனுஸ், ஹாஜி எம்.ஜெ.ஸிராஜுத்தீன், ஹாஃபிழ் எம்.ஜெ.நூஹுத்தம்பி, ஹாஜி எம்.ஜெ.ஃபவ்ஸுர்ரஹ்மான் ஆகியோரின் மாமியுமாவார்.
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 09.00 மணியளவில், அவர்களின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. ஜனாஸா தொழுகையை மவ்லவீ ஹாஃபிழ் கே.எஸ்.கிழுறு முஹம்மத் ஃபாஸீ வழிநடத்தினார்.
தகவல்:
M.N.ஷாஹுல் ஹமீத்
ஹாங்காங்
மற்றும்
A.K.இம்ரான்
[செய்தி திருத்தப்பட்டது @ 11:11 / 14.10.2012] |