செய்தி எண் (ID #) 9287 | | | புதன், அக்டோபர் 3, 2012 | தமிழக அமைச்சரவையில் மாற்றம்! | செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 2984 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய | |
தமிழக அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் செய்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. அதன்படி, இதுவரை வணிக வரித்துறை அமைச்சராக இருந்த சி.வி. சண்முகம் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அத்துறையை ரமணா ஏற்கிறார்.
மதிய உணவுத் திட்டத்துறையை பா. வளர்மதி கூடுதலாக ஏற்கிறார்.
அமைச்சர் எஸ்.ஆர். சிவபதி சட்டம் மற்றும் சிறைத் துறையும், அதிமுக கொறடா ப.மோகன் ஊரக தொழில்துறையையும் ஏற்க உள்ளனர்.
தற்போது ஊரகத் தொழில்துறை அமைச்சராக இருந்த எம்.சி. சம்பத், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக மாற்றப்படுகிறார்.
அக்டோபர் 6ம் தேதி தமிழக ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில், இவர்களது பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் சட்டப்பேரவையின் சபாநாயகராக இருந்த டி.ஜெயகுமார் பதவி விலகினார். தற்போது துணை சபாநாயகராக இருக்கும் பி.தனபால் புதிதாக சபாநாயகர் பொறுப்பை ஏற்க உள்ளார்.
தகவல்:
தினமணி |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|