காயல்பட்டினம், ஆறுமுகநேரி, ஆத்தூர் மற்றும் திருச்செந்தூர் பகுதிகளுக்கு மேலாத்தூரில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய சுத்திகரிப்பு மற்றும் குடிநீரேற்று நிலையத்திலிருந்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
அணைகளில் நீர் குறைவாக இருந்ததாலும், நீர் வரத்து பாதிக்கப்பட்டதாலும் - நீர்தேக்கத்திலுள்ள நீரை பகிர்ந்தே மேற்கண்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டது. வழக்கமாக வினியோகிக்கப்படும் அளவை விட 50 சதவீதத்திற்கும் குறைவாக நீர் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டப்பாடு நிலவியது.
காயல்பட்டினம் நகராட்சிக்கு வழமையாக 23 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படும். இது நீர் பற்றாக்குறை காரணமாக - சில மாதங்களுக்கு முன்னர் - 11 லட்சம் லிட்டராக குறைக்கப்பட்டது. செப்டம்பர் 1 முதல் இது 12 லட்சம் லிட்டராக அதிகரிக்கப்பட்டது.
செப்டம்பர் 9 முதல் இது மேலும் அதிகரிக்கப்பட்டு 13 லட்சம் லிட்டராக வழங்கப்பட்டது.
நாளை (அக்டோபர் 3) முதல் இது 15 லட்சம் லிட்டராக உயர்த்தப்படும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதிகாலை 3 மணி முதல் மதியம் 3 மணி வரை - 12 மணி நேரம் பம்பிங் செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
1. இனியும் மீட்டர் பொருத்துவதில் கால தாமதம் ஏன்..? posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல் - 97152 25227)[03 October 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22576
ஆத்தூரிலிருந்து காயல்பட்டினத்திற்கு வினியோகிக்கப்படும் குடிநீர் அளவை அதிகரித்து நமக்கு என்ன பயன்...!
அந்த அதிகரித்த குடிநீர் காயல்பட்டினத்திற்கு உள்ளே நுழையவா செய்கின்றது..! ஊருக்கு வரும் வழியிலேயே பாதி பறிபோய் போய்விடுகிறது...
என்றைக்கு மீட்டர் பொருத்தி ஆத்தூரிலிருந்து காயல்பட்டினத்திற்கு வினியோகிக்கப்படும் குடிநீர் அளவை கணக்கிடுகிரார்களோ... அன்றைக்கு தான் சீரான குடிநீர் அளவு காயல்பட்டினத்திற்கு உள்ளே நுழைய வரும்...
பைபாஸ் சாலையில் மீட்டர் அறை தனியார் நிலத்தில் நன்கொடை மூலம் கட்டி முடிக்க பட்டுவிட்டது...! இனியும் மீட்டர் பொருத்துவதில் கால தாமதம் ஏன்..? வீடியோவும் மீடியாவும் தான் அதிமுக்கிய பிரச்சனையாக எடுக்கும் நகரமன்ற உறுப்பினர்களுக்கு நகர மக்களின் குடிநீர் பற்றாகுறை பிரச்சனை, சுகாதார சீர்கேடுகள் மற்றும் இந்த குடிநீர் அளவு மீட்டரை பற்றி கவலை ஏது...
நகரமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வெளிநடப்பு செய்வதனால் அவர்கள் என்ன.. என்ன.. நன்மைகள் மக்களுக்கு சாதித்தார்கள்... நாங்கள் வெளிநடப்பு செய்ததால் மக்களுக்கு இதை சாதித்தோம்...! மக்களுக்கு அதை சாதித்தோம்...! என்று பட்டியல் போடுங்களேன்.. மக்களுக்கு...
2. Re:...பானையில் ஓட்டை posted bymackie noohuthambi (kayalpatnam)[04 October 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22595
எவ்வளவுதான் பானை நிறைய தண்ணீர் ஊற்றினாலும் பானையில் கசிவு இருந்தால் ஓட்டை இருந்தால் பானையில் தண்ணீர் நிற்காது என்று ஐந்து வயது பிள்ளைக்கும் தெரியும்.
ஆத்தூரில் இருந்து வரும் பைப்புகளில் ஓட்டை என்கிறீர்கள்,மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவது இன்னும் தொடர்கிறது என்கிறீர்கள், இரண்டொரு தெருவில் மட்டும் அதிரடி சோதனை நடந்து,பின்னர் அது தொடரப்படாமல் கிடப்பில் போடப்பட்டு விட்டது என்கிறீர்கள், இத்தனைக்கும் பிறகு 15 லிட்டர் வந்தால் என்ன,பழைய 23 லிட்டரே வந்தால் என்ன, அரசியல்வாதிகள் பேசும் புதிய பைப்பு லைன் வந்தால் என்ன..குடிநீர் வரி பாக்கி பல லட்சம் நிலுவையில் உள்ளது என்கிறீர்கள் ..
.இத்தனை குறைபாடுகளையும் சரி செய்ய முடியாமல் ஒரு கையால் ஆகாத ஒரு நகர்மன்றமாக நமது நகர்மன்றம் செயல் இழந்து நிற்கும்போது, தண்ணீர் கதை என்றும் ஒரு கண்ணீர் கதைதான் .......
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross