ரியாத் வாழ் காயலர்கள் சங்கமம் சென்ற வியாழக் கிழமை (27-09-2012) அன்று மாலை துமாமாவில் உள்ள இஸ்திராஹாவில் வைத்து நடைபெற்றது. இதில் குழந்தைகள் உட்பட 104 பேர் - 21 குடும்பங்களில் இருந்து - கலந்து கொண்டனர்.

மாலை 5 மணியளவில் நிகழ்வுகள் ஆரம்பமாயின. பெண்கள் பகுதியில் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டது.

ஆண்கள் பகுதியில் கால்பந்து போட்டி - திருமணமானவர்களுக்கும், திருமணமாகாதவர்களுக்குமிடையே நடத்தப்பட்து. அது தவிர பேட்மிட்டன், மேஜை கால்பந்து, மேஜை டென்னிஸ் போன்ற விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன. போட்டிகளில் கலந்துக் கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இறுதியாக - இரவு 10 மணியளவில் - முன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவு ஹோட்டலில் இருந்து கொண்டுவரப்பட்டு பரிமாறப்பட்டப்பின் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.

தகவல்:
எஸ்.எல். சதக்கத்துல்லாஹ் மற்றும்
என்.எம். இஸ்மாயீல்,,
ரியாத். |