காயல்பட்டினம் நகராட்சியின் அவசர கூட்டம் இன்று (அக்டோபர் 5) மாலை 4 மணி அளவில் - நகர்மன்ற கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் - தமிழக அரசின் IUDM திட்டம் 2012 - 2013 இன் படி காயல்பட்டினம் நகராட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கான ஒப்புதலும், திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுப்பதற்கான திட்டத்திற்கான ஒப்புதலும், வடகிழக்கு பருவமழையின்போது மேற்கொள்ளப்படவேண்டிய பணிகளுக்கான ஒப்புதலும் - கோரப்படவுள்ளது.
காயல்பட்டினம் நகராட்சியின் கடந்த மூன்று சாதாரண கூட்டங்கள் (கூட்டம் 1, 2, 3) - தீர்மானங்கள் நிறைவேற்றப்படாமல் முடிவுற்றன என்பது நினைவிருக்கலாம். அதனை தொடர்ந்து - அது குறித்து, நகராட்சி நிர்வாகத்துறை, நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் விளக்கம் கேட்டதாக தெரிகிறது. தலைவர் மற்றும் உறுப்பினர்கள், திருநெல்வேலியில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையின் மண்டல அதிகாரி மூலமாக, தங்கள் பதிலை சில தினங்களுக்கு முன்னர் எழுத்துப்பூர்வமாக வழங்கியுள்ளதாகவும் தெரிகிறது.
|