வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான கருத்தரங்கம் புதன்கிழமை (அக்டோபர் 6) அன்று நடைபெற்றது. இது குறித்து அக்கல்லூரி சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:
காயல்பட்டணம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் பொருளியல்துறை மற்றும் நேரு ஆய்வரங்கம (Centre for Nehru Studies), மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சார்பிலும் 03.10.2012 (புதன்கிழமை) அன்று “நேருவும், இந்தியாவும்” என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரி நிறுவனர்-தலைவர் அல்ஹாஜ் வாவு S. செய்யது அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமைத் தாங்கினார். இணைச் செயலாளர் வாவு S.A.R. அஹ்மது இஸ்ஹாக், M.A., Azhari (Egypt) அவர்கள் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர். V. சசிகலா, M.A., M.Phil., Ph.D அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள். கல்லூரி நிர்வாக இயக்குநர் டாக்டர். மெர்ஸி ஹென்றி, M.A., Ph.D. அவர்கள் கருத்தரங்கத்தின் விளக்க உரையாற்றினார்கள். கல்லூரியின் செயலர் ஹாஜி வாவு M.M. மொகுதஸீம், B.A.,(CS) அவர்கள் தலைமை உரையாற்றினார்கள். நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பொருளியல்துறை தலைவர் டாக்டர் J. சாக்ரடீஸ் அவர்கள் தொடக்க உரையாற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார்கள்.
“நேருவின் கண்ணோட்டத்தில் இந்தியா” என்ற தலைப்பில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் பொருளியல் துறை தலைவர் டாக்டர். T. தங்கராஜ் அவர்கள் உரையாற்றினார்கள். அதை தொடர்ந்து அம்பை கலை கல்லூரியின் பொருளியல்துறை பேராசிரியை திருமதி. டாக்டர் G. தனலெட்சுமி அவர்கள் “பொருளாதார கொள்கையில் நேருவின் பங்கு” குறித்து உரையாற்றினார்கள்.
ஒரு நாள் கருத்தரங்கு நிகழ்வின் இறுதியாக அம்பாசமுத்திரம் அம்பை கல்லூரி முதல்வர் டாக்டர் M. வேலய்யா அவர்கள் நிறைவு உரை ஆற்றினார்கள். இறுதியில் பொருளியல்துறை தலைவி திருமதி. M.சூரத்ஷீபா, M.A., M.Phil. நன்றி கூற கருத்தரங்கம் இனிதாக நிறைவுற்றது.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |