சிறுபான்மையின மாணவ-மாணவியர்களுக்கான தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி உதவிதொகை பெற விண்ணப்பிப்பதற்கான காலவரம்பு 15.10.2012 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திகுறிப்பு வருமாறு:
தமிழ்நாட்டில் வாழும் மதவழி சிறுபான்மையினரான கிறித்துவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்தமதத்தினர் மற்றும் பாரசீகியர் பிரிவைச்சார்ந்த மருத்துவம், பொறியியல், சட்டம், கால்நடை மருத்துவம், மேலாண்மைக்கல்வி போன்ற தொழிற்கல்வி/தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவமாணவியர்கள் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவிக்தொகை (புதியது) Merit Cum Means Based Scholarship பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான காலவரையரை 30.09.12 லிருந்து 15.10.2012 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, இதுவரை தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்காத தகுதிவாய்ந்த சிறுபான்மையின மாணவ-மாணவியர்கள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்தி www.momascholarship.gov.in என்ற இணையதளத்தில் (Online) மூலம் விண்ணப்பித்து கல்வி நிலையங்களுக்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் அவ்விண்ணப்பங்களை படியிறக்கம் செய்து, அத்துடன் மதிப்பெண் சான்றிதழ், சாதி, வருமானம், கல்விக்கட்டணம் செலுத்திய ரசீது, இருப்பிட முகவரி, வங்கி கணக்கு எண் (Core Bank Service Account Number, IFS Code) ஆகிய சான்றாவணங்களை இணைத்து கல்வி நிலையங்களில் 15.10.2012க்குள் சமர்ப்பிக்கவேண்டும்.
கல்வி உதவித்தொகை மாணவ-மாணவியர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படவுள்ளதால் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது வங்கி கணக்கு விவரங்களையும் மாணவ-மாணவியர்கள் தவறாது சமர்ப்பிக்கவேண்டும் இதுவரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்போது மாணவ/மாணவியர்களால் முழுவிவரங்கள் பூர்த்தி செய்யாமல் நிலுவையில் உள்ளது. அவ்விண்ணப்பங்களில் முழு விவரங்களை உடனடியாக பூர்த்தி செய்து / குறைபாடுகளை நிவர்த்தி செய்து, மேலும் தாமதமின்றி அவ்விண்ணப்பங்களை கல்வி நிலையங்களுக்கு ஆன்லைன் மூலம் தவறாது சமர்ப்பித்தல் வேண்டும்.
கல்வி நிலையங்கள் மேற்படி ஆன்லைன் மூலம் மாணவ-மாணவியர்களால் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை (புதியது) அவ்வப்போது பரிசீலித்து தகுதிபெற்ற விண்ணங்களை ஆன்லைமூலம் பரிந்துரை செய்யவேண்டும். மேலும் அவ்விண்ணப்பப்படிவங்களில் கையொப்பமிட்டு அத்துடன் அனைத்து சான்றாவணங்களையும் 15.10.2012க்குள் சிறுபான்மையினர் நல ஆணையர், 807 (5வதுதளம்), அண்ணாசாலை, சென்னை-600 002 என்ற முகவரிக்கு தவறாது அனுப்புதல் வேண்டும். மாணவர்கள் மற்றும் கல்வி நிலைய முதல்வர் ஆகியோர்களின்
கையொப்பங்கள் இல்லாத விண்ணப்பங்கள் பரிசீலினைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
மேலும் உதவிக்கு சிறுபான்மையினர் நல ஆணையர் அலுவலக தொலைபேசி (Help Line) 044 28523544 தொடர்பு கொள்ளலாம்.
சிறுபான்மையினர் நல ஆணையர்
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி – மக்கள் தொடர்புத் துறை, சென்னை - 9.
|