மத்திய அரசு - வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் மானிய சிலிண்டரை - 11.42 ரூபாய் உயர்த்தியுள்ளது. இனி - காஸ் சிலிண்டர் சென்னையில் 397.92 ரூபாய்க்கு விற்பனையாகும். சிலிண்டர் விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும் கமிஷன் - ரூபாய் 25.83 இல் இருந்து ரூபாய் 37.25 என உயர்த்தப்பட்ட காரணத்திற்காக இந்த விலையேற்றம் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தவிர - மானியம் இல்லாத சிலிண்டரின் விலை - 38 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. மானியமில்லாத சிலிண்டர் இனி 921.5 ரூபாய்க்கு விற்பனையாகும். மானியமில்லாத சிலிண்டருக்கு வழங்கப்படும் கமிஷன் - ரூபாய் 12.17 இல் இருந்து ரூபாய் 38 என உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீஸல் விற்பனையாளர்களுக்கான கமிசனும் உயர்தப்படவுள்ளதால் - அவைகளின் விலையும் விரைவில் ஏறும் என கூறப்படுகிறது.
1. Re:. நடுத்தர மக்கள் படும் பாடு இருக்கிறதே சொல்லி மாளாது... posted byceylon fancy KAZHI. (jeddah,Saudi Arabia.)[08 October 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22689
சமையல் கேஸ் சிலிண்டரின் விலை பெட்ரோல் மற்றும் டீசல் விலை மற்றும் அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் விலை ஏற்றி விட்டார்கள் . ஆனால் சம்பளம் மட்டும் ஏற்றவே மாட்டார்கள். என்ன செய்ய ?.மிக பெரிய பணக்காரர்களுக்கும் ,பரம ஏழைகளுக்கும் பிரச்சனை இல்லை. ஆனால் இந்த நடுத்தர மக்கள் படும் பாடு இருக்கிறதே சொல்லி மாளாது. விழுங்கவும் முடியாமல் ,கக்கவும் முடியாமல் முழி பிதுங்கி நிற்பார்கள். பிறரிடம் கையேந்த வெட்கப்படுவார்கள். இவர்களை தேடி சென்று ,நம் காயல் நல மன்றங்கள் உதவி செய்தால் ...அது தான் மிக பெரிய உதவி.
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross