அக்டோபர் 08ஆம் தேதியன்று (நாளை - திங்கள்) அன்று காயல்பட்டினம் உள்ளிட்ட - ஆறுமுகநேரி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக மின்தடை செய்யப்படவுள்ளது.
காலை 09.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை இந்த மின்தடை செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. Re:... posted byCnash (Makkah)[07 October 2012] IP: 84.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22667
இப்படி ஒரு அறிவிப்பு மாதா மாதம் விடுவதற்கு மின்வாரியத்திற்க்கே அசிங்கமாக தோணவில்லையா?
அக். 08 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை இந்த மின்தடை செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..... அப்போ அதுக்கு பிறகு தடை இல்லாமல் இருக்குமா?
2. Re:...பழக்கப்பட்டு விட்டது posted bymackie noohuthambi (kayalpatnam)[07 October 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22669
எப்போதாவது மாதம் ஒரு முறை இப்படி பராமரிப்பு நடந்தால் அதை பற்றி மக்கள் கவலைப்பட மாட்டார்கள்.
இன்றும் கூட மின்சாரம் காலை முதல் பகல் இரண்டு மணி வரை இல்லை.தினசரி 12 மணி நேரத்துக்கு மேல் மின் இணைப்பு இல்லை.என்று ஆகி விட்ட பிறகு இப்படி ஒரு அறிவிப்பு செய்வது சிவப்பு நாடா முறையில் உள்ள ஒரு நடவடிக்கை.மற்றப்படி இதை யாரும் பெரிதாக எடுத்துக்கொண்டு அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தேவை இல்லாமல் பழக்கப்பட்ட ஒரு சாதாரண நிகழ்வாக ஆகிவிட்டது.
என்று தணியும் இந்த மின்சார தாகம் என்று மடியும் இந்த மின்வெட்டின் தாக்கம். ஆட்சி மாறினால் எல்லாம் சரியாகி விடும் என்று நம்புவது எவ்வளவு பைத்தியக்காரதனம்! .உங்கள் முன் அறிவிப்புக்கு நன்றி. உங்கள் கடமையை செய்கிறீர்கள்.
ஃபேஸ்புக்கில் சமீபத்தில் ஒரு கமெண்ட் பார்த்து வாய்விட்டு சிரித்தேன். நாகரீகம் கருதி சில எழுத்துக்களை தவிர்த்து தருகின்றேன். ஊகித்துக் கொள்பவர்கள் சிரிக்கலாம் கரண்ட் கம்பம் படம் போட்டு அதற்கு கீழே இருந்த வாசகங்கள்,
“இல்லாத கரண்டுக்கு என்ன.........ருக்குடா பராமரிப்பு...?”
-இட்ஸ் நாட் “மை” கமெண்ட்.-ராபியா மணாளன்.
6:59. அவனிடமே மறைவானவற்றின் திறவு கோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross