தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் இம்மாதம் 07ஆம் தேதி (நாளை) நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து - தக்வா உறுப்பினர்களுக்கு அம்மன்றத்தின் சார்பில், அதன் செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்பார்ந்த தாய்லாந்து காயல் நல மன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் தாய்லாந்து வாழ் காயலர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நம் மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் இன்ஷாஅல்லாஹ் இம்மாதம் 07ஆம் தேதி (நாளை) காலை 10.30 மணிக்கு, வாவு அலீ அவர்களின் இல்லத்தில், மன்றத் தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில், நமதூர் காயல்பட்டினம் நகர்நலன் குறித்த நல்ல பல அம்சங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் செய்யப்படவுள்ளதோடு, தக்வா இதுவரை ஆற்றியுள்ள பணிகள், வருங்கால செயல்திட்டங்கள் குறித்தும் விவாதித்து முடிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. கூட்டம் நிறைவுற்ற பின்னர், நிகழ்விடத்திலேயே மதிய உணவு விருந்துபசரிப்பும் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில், தாய்லாந்து காயல் நல மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும், தாய்லாந்து வாழ் காயலர்களும் திரளாகக் கலந்துகொண்டு, நமது நகர்நலப் பணிகள் சிறப்புற ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு, தக்வா அமைப்பின் செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் தனதறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
தகவல்:
தக்வா அமைப்பின் சார்பில்
கம்பல்பக்ஷ் அஹ்மத் இர்ஃபான்
பாங்காக், தாய்லாந்து. |