காயல்பட்டினம் நகராட்சியின் அவசர கூட்டம் இன்று (அக்டோபர் 5) மாலை 5 மணி அளவில் - நகர்மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் தலைமை தாங்கினார். வார்ட் 10 உறுப்பினர் பதுருல் ஹக் தவிர 17 நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.
இக்கூட்டத்தில் - தமிழக அரசின் IUDM திட்டம் 2012 - 2013 இன் படி காயல்பட்டினம் நகராட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கான ஒப்புதலும், திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுப்பதற்கான திட்டத்திற்கான ஒப்புதலும், வடகிழக்கு பருவமழையின்போது மேற்கொள்ளப்படவேண்டிய பணிகளுக்கான ஒப்புதலும் - ஏகமனதாக வழங்கப்பட்டது.
இக்கூட்டம் குறித்த மேலதிக விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
இக்கூட்டத்திற்கு பார்வையாளர்கள் என்ற முறையில் சென்று இருந்தேன்..
ஆகா.. ஆகா.. மிக்க மகிழ்ச்சியை தந்தது அல்ஹம்துல்லில்லாஹ்..! இக்கூட்டத்தில் அணைத்து உறுப்பினர்களின் நடவடிக்கைகளும் இக்கூட்டத்திற்கு வந்திருந்தோரின் மனதை சந்தோஷ படுத்தியது.. பார்வையாளர்கள் அனைவர்களும் கூட்டம் முடிந்து மகிழ்ச்சியோடு அவரவர் இல்லம் களைந்து சென்றனர்...
ஆக மொத்தத்தில் இன்று நடந்த கூட்டத்தில் மீடியா - புகைப்படம் உள்ளே அனுமதிக்கப்பட்டு நல்ல முறையில் மக்களுக்கு நன்மையான தீர்மானங்களை நமது சகோதர்கள் (அணைத்து உறுப்பினர்களும்) நிறைவேற்றினார்கள்... பாராட்டுகிறேன்... வாழ்த்துகிறேன்...
இது போல் இனி நடக்க இருக்கும் அணைத்து கூட்டத்திலும் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து நகருக்கு முக்கியமான பல நல்ல திட்டகள் நிறைவேற ஒத்துழைப்பு கொடுத்து நகர் மக்களின் மத்தியில் நல்ல பெயரும்... பாராட்டுக்களும்... வாழ்த்துக்களும்... பெறுங்கள்..
மீடியா உள்ளே வந்தால் என்ன...! அது வராமல் எக்கெடு கெட்டு எங்கு தொலைந்தால் என்ன.. நமக்கு வாக்களித்த மக்களுக்கு நல்ல திட்டம் நிறைவேறினால் போதும்.. என்ற அடிப்படையில் இன்று நடந்த கூட்டம் அமைந்து இருந்தன...
இது போன்று எல்லா உறுப்பினர்கள் மன ஒற்றுமையுடன் வெறுப்பு இன்றி வருகின்ற கால கட்டங்களில் நம் ஊர் நலத்தை மனதில் கொண்டு. நகர்மன்றத்தின் கூட்டத்தில் எல்லா தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றி ஊர் மக்களுக்கு நல்லது நடந்தால் ரொம்பவும் சந்தோசம்தான்.
தீர்மானங்களை உடனே நிறைவேற்றினால் மிக்க மகிழ்சி.ஒரு வருடங்கள் வினாகி விட்டன.
5. Re:...மிக்க மகிழ்ச்சி posted byahmed meera thamby (makkah)[05 October 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22630
அல்லாஹ் எல்லாம் நன்மையாக்கி தருவான்
எல்லா உறுப்பினர்களும் ஒற்றுமையா இருந்து ஊர் நன்மைக்கு ஒத்துழைத்து நாம் நம் குடும்பம் என்று இல்லாமல் ஜாதி மதம் பார்க்காமல் நான் பெரியவன் நீ சிறியவன் என்று பாராமல் மானத்துடன் மரியாதையுடன் சண்டை சச்சரவு இல்லாமல் எல்லோரும் ஒற்றுமையா வாழ அல்லாஹ் அருள் புரிவான் ஆமீன்
ஊர் நலன் விருப்பி
உங்கள் சகோதரன்
அஹ்மத் மீரா தம்பி(அபூ முனவ்வரா)
புனித மக்காஹ்
அல் சுகதா ஹோட்டல்
6. Open-toilet posted byAbdul Wahid S. (Kayalpatnam.)[05 October 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 22634
"..................திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுப்பதற்கான திட்டத்திற்கான ஒப்புதலும்,.........." (Copy & Paste)
66 வது சுதந்திர தின விழாவை கொண்டாடியகிவிட்டது. இபொழுதுதான் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இந்த திறந்த வெளியில் மக்கள் மலம் கழிப்பதை தடுப்பது பற்றிய ஞானம் உதித்திருக்கிறது.
(அதுவும் ஒரு சமூக ஆர்வலர் Right to Education சம்பந்தமாக பொது நல வழக்கு தொடர்ந்ததன் விளைவாக போன வருஷம் (11-10-2011) உட்ச நீதிமன்றத்தில் ஆணை பிறப்பித்த பிறகு)
A report by the WHO and the UNICEF that showed India in a poor light says that India has a shocking number of 58% of all people who defecate in the open. China and Indonesia share the second place with just 5% of their population not having toilets. Pakistan and Ethiopia are third with 4.5% such people.
ஒரு ஆய்வு அறிக்கையின்படி (தகவலின்) நமது நாட்டில் சுமார் 58 % மேற்பட்ட மக்கள் திறந்த வெளியில்தான் மலம் கழிக்கிறார்கள்.
7. Re:... posted byMuzammil (Dubai)[05 October 2012] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22635
அஸ்ஸலாமு அலைக்கும்
மாஷா அல்லாஹ் இது மாதிரி செய்திகளை கேட்க மிக சந்தோசமாக இருக்கிறது. இது மாதிரி எப்பொழுதும் ஒற்றுமையுடன் மற்ற நகராட்சிகளுக்கு முன் மாதிரியாக இருக்க வல்ல அல்லாஹ் உதவி செய்வானாக ஆமீன்.
8. தொடரட்டும் posted byMauroof (Dubai)[05 October 2012] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22636
பல மாதங்களுக்கு பிறகு நகராட்சி கூட்டம் ஆரோக்கியமான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது என்ற செய்தி அறிந்து மிக்க சந்தோஷம். இனிவரும் காலங்களில் நடைபெறவிருக்கும் நகராட்சி கூட்டங்களும் சிறப்பான முறையில் நடைபெற்று நல்ல பல ஆக்கப்பூர்வமான திட்டங்கள் செயல்வடிவம் பெறுவதின் மூலம் நம் நகரமும் நகர்மன்றமும் இத்தமிழ் கூறும் நல்லுலகில் ஒரு முன்மாதிரியாக அமையவேண்டும் என்ற எதிர்பார்ப்புக்களுடனும், வாழ்த்துக்களுடனும்.
9. Re:... posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[05 October 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22637
ஹம்திலில்லாஹ்! இதுவரை கிடைத்த செய்திவரை, மனதிற்கும் மக்களுக்கும் பெரும் நிம்மதியை தரும் தித்திப்பான செய்தியே!
இந்த இதயம் குளிரும் நிகழ்வு என்றும் இனிமையாக தொடரவேண்டுமென்றால் அது, அன்பு தலைவி அவர்கள் கையிலும், அன்பார்ந்த அனைத்து உறுபினர்கள் கையிலும் தான் இருக்கிறது.
எங்கள் எதிர்பார்ப்பை இலகுவாக்கி தந்தருள்வயாக யாஅல்லாஹ்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான் மற்றும் யான்போ கலவா அபூபக்கர் அவர்களின் காயல் ஹவ்ஸில் வசிக்கும் அனைத்து காயல் சகோதரர்கள்.
நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெட புழுதியில் எறிவருண்டோ....? சொல்லடி...! எனும் மகாகவி பாரதியின் பாடல் ஓசை காற்றின் அலைகளில் கலந்து வந்து மெல்ல என் காதுகளில் விழுகின்றது! இனிது! இனிது! இது யாம் கேட்பதினிது.இதினும் இனிது இவர் யாவரும் இனியவர் எனக் கேட்கவிருப்பது இனிது!
12. Re:... posted byP.S.ABDUL KADER (KAYAL PATNAM)[06 October 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22652
அவசர கூட்டம் என்றதால்தான் எல்லா தீர்மானமும் ஏகமனதாக நிறைவேறி இருக்கு.
மாதந்திர கூட்டம் என்று முன்கூட்டியே அறிவித்து இருந்தால்?
இந்த கூட்டமும் வழமைபோலத்தான்.
இனி எல்லா மாதமும் அவசர கூட்டம் என்றே உறுபினர்களுக்கு அழைப்பு கொடுத்து நகரமன்ற இழுவையில் உள்ள அணைத்து கோரிக்கைகளுக்கும் நல்ல முடிவு காணலாம்.
வாழ்த்துக்கள் நகரமன்ற தலைவிக்கும் மற்றும் அணைத்து வார்டு உறுபினர்களுக்கும்.
ஜெய் ஹிந்த்.
13. மாஷால்லாஹ்! வாழ்த்துகள்! posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[07 October 2012] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22664
அஸ்ஸலாமு அழைக்கும்.
மாஷா அல்லாஹ்! இன்ப அதிர்ச்சி! தலைவி மற்றும் அனைத்து உரிபினர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்! கண்ணு பட்டிட போகது! ஜாக்கிரதை...அல்லாஹ் இதுபோன்றே அனைத்து விசயங்களிலும் விட்டுகொடுக்கும் மனபான்மையுடன் ஒற்றுமையுடன் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற உதவிடுவானாக ஆமீன்!
தலைவி அவர்களின் மேற்பார்வையில் அவர்கள் அந்தந்த வார்டுக்குட்பட்ட வேலைகளை அந்த வார்டு உறுப்பினர்களிடம் ஒப்படைத்து அவர்களின் அனுமதி பெற்றபிறகு இறுதியாக அப்பகுதிகளை அந்த வார்டு உறுப்பினர்களுடன் தலைவியும் சேர்ந்து சென்று வேலைகளுக்கு இறுதி ஒப்புதல் வழங்கி நல்ல திறமையான ஊழலற்ற திட்டங்களை நிறைவேற்றிடுங்கள்....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross