Re:...நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம் posted bymackie noohuthambi (kayalpatnam)[06 October 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22641
ராபியா லாத்தா அவர்கள் உடல்நலக்குறைவாக இருக்கிறார்கள் என்ற செய்தி கேள்விப்பட்டவுடன் நான் நேரில் சென்று பார்த்தேன்.
எங்கள் தந்தை மக்கி ஆலிம் அவர்களுக்கு நெருங்கிய உறவு முறை. என் தந்தை அவர்கள் உடல் நலமில்லாமல் இருக்கும் நேரத்திலும் சுன்னத்தான நோன்புகளை வைராக்கியமாக பிடித்து வருவார்கள். யார் சொன்னாலும் கேட்கமாட்டார்கள். அப்போது ராபியா லாத்தாதான் கண்கண்ட மருந்து. அவர்களை கூப்பிட்டு அனுப்பினால் உடனே வந்து விடுவார்கள். விஷயத்தை சொல்வோம்.
சாச்சப்பா, உங்களுக்கு தெரியாத மார்க்க சட்டமா எனக்கு தெரியும். நாமதான் சுகமாக இருக்கும்போது எவ்வளவோ சுன்னத்தான நோன்புகள் நோற்றிருக்கிரோமே. இப்போது நீங்கள் நோன்பு நோர்கவேண்டுமா, உங்களுக்கும் கஷ்டம், வீட்டில் சாச்சி யும் உடல் நலமில்லாமல் இருக்கிறார்கள். அவர்களையும் பார்க்கவேண்டும். உம்மா வாப்பாவை மகள்கள் கவனிதுக்கொண்டிருக்கிரார்கள். அவர்கள் பிள்ளய்களையும் மாப்பிள்ளைகளையும் கவனிக்க வேண்டியுள்ளது. எனவே நோன்பை விட்டு பிடிங்கள். இன்ஷா அல்லாஹ்.. அல்லாஹ் நல்ல சுகத்தை தருவான் அப்போது மீண்டும் நோன்பு பிடிக்கலாமே என்று எவ்வளவு தன்மையாக பேசி எங்கள் வாப்பாவை சரி செய்து தண்ணீர் குடித்து நோன்பு திறக்க வைப்பார்கள்.
அந்த மலரும் நினைவு எங்கள் குடும்பத்தில் அவர்கள் செய்த மாபெரும் சேவை.... என்றும் மறக்க முடியாது.
இது ஒரு சாம்பிள் தான். இப்படி எத்தனையோ குடும்ப விஷயங்கள் குடும்ப சிக்கல்களை சாதாரணமாக தீர்த்து வைத்திருக்கிறார்கள்.
அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் நற் செயல்களை பொருந்தி கொள்வானாக. பாவங்களை மன்னித்துக்கொள்வானாக . அவர்கள் மண்ணறையை வெளிச்சமாகவும் விசாலமாகவும் ஆக்கிவைப்பானாக. மேலான சுவர்க்க பதியை கொடுத்தருள்வானாக.
இந்த உன்னத நற்பண்பை அவர்கள் குடும்பத்தினரும் முன்னெடுத்து செல்ல அல்லாஹ் தவ்பீக் செய்வானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross