Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[08 October 2012] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22683
நகர்மன்ற அவசர கூட்டம் நடைபெறப்போகின்றது என்றதும் ஒரே படபடப்பு.
நகர்மன்ற அவசர கூட்டம் அமைதியாகவும், பிரயோசனமாகவும் நடைபெற்றது என்றதும் ஒரே பூரிப்பு.
கண்டிப்பாக அனைவர்களுக்கும் நன்றி சொல்லுவது நம் கடமை.
எங்கள் மஹலரா நகர் (ஊரில் பல புதிய நகர்கள், பலருக்கு எங்கு இருக்கின்றது என்றே தெரிவது இல்லை). ஐயா சாமி அவர்களே.
* எங்கள் வீட்டின் மாடியில் இருந்து காலையில் பார்த்தால், சுற்றிலும் மனிதத்தலைகள் தான், பூமிக்கு உரம் சேர்க்கும் வேலை தான். முடிந்ததும் அருகில் இருக்கும் அசுத்தம் நிறைந்த, கொசு உற்பத்தி நிலையமான சிறிய குட்டையில் அவர்களை சுத்தம் பண்ணுகிறார்கள்..!!! கொடுமை. இதை கொஞ்சம் கவனியுங்கள்.
* இந்த நகரில் வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. ரோடு வசதி.. ஊஹூம்.. சுதந்திரத்துக்கு முன்னாடி பார்த்த மாதிரியே உள்ளதாம்.
நாங்கள் எங்களின் வீட்டிற்கு பிளான் அப்ரூவல் பண்ணும்போது,பிற்காலத்தில் ரோடு போடுவதற்கு என்று ஒரு அமௌன்ட் கூடுதல் கட்ட சொன்னார்கள். கட்டினோம். ரோடு...!!
* நாய்களை பிடித்தார்கள், ஆபரேஷன் பண்ணினார்கள், மீண்டும் விட்டார்கள். ஆனால் தொல்லைகள் தொடரத்தான் செய்கின்றன. முன்பு 5 அல்லது ஆறு நாய்கள் தான் எங்கள் பகுதியில் சுற்றிக்கொண்டு இருந்தன. தற்போது 15 இக்கும் அதிகம். வீட்டில் வளர்க்கும் கோழி வெளியில் சென்றால், திரும்பவும் நமக்கு கிடைக்குமா என்பது புதிர்தான்.
இரவில் கடையில் சாமான் வாங்க பசங்க போக பயம். சுபுஹு தொழுக செல்ல பயம். பெண்கள் தனியாக செல்ல பயம். நாய் பயம்.
* தெருவிளக்கு, தற்போது பரவாஇல்லை. தேங்க்ஸ். சாமி ஐயா.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross