செய்தி: “நல்ல நகர்மன்றம் அமைய என்ன வழி?” எனும் தலைப்பில் ஊழல் எதிர்ப்பு இயக்கம் நடத்திய கருத்தரங்கம்! விருத்தாச்சலம் நகர்மன்ற முன்னாள் தலைவர் டாக்டர் வள்ளுவன் சிறப்புரை!! திரளான பொதுமக்கள் பங்கேற்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஊழல் எதிர்ப்பு இயக்கம் நடத்திய கருத்தரங்கம்! posted bySalai.Mohamed Mohideen (USA)[10 October 2012] IP: 205.*.*.* United States | Comment Reference Number: 22735
ஒரு சமுதாயம் நல்லதொரு மாற்றத்தை விழிப்புணர்வை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது என்பதற்க்கான அடையாளங்கள் தான் இது போன்ற கருத்தரங்கங்கள். இது போன்ற விழிப்புணர்ச்சிகள் எப்பொழுதும் தொடர்ந்து மக்களுக்கு தந்து கொண்டிருக்க வேண்டும் ஏனென்றால் மறந்து கொண்டிருப்பது மக்களின் இயல்பு... 'தொடர்ந்து' ஞாபகப்படுத்தி கொண்டிருப்பது இது போன்ற இயக்கங்களின் கடமை.
மாப்பிள்ளை முஹ்யித்தீன் அவர்களை போல், முந்தைய நமது நகர்மன்றத்தில் கறைபடியாத கைகளுக்கு சொந்தக்காரகளாய் பணியாற்றிய திருத்துவராஜ் போன்றவர்கள் நமது தலைவிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
“இந்த நகர்மன்றம் மக்கள் வரிப்பணத்தில் நடைபெறுவதாகும்! இங்கு அவர்களே எஜமானர்கள்!!” -- புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் ... புரியவைத்தால் மிக நலம் !!
மக்களை பிடித்திருக்கும் தீராத நோய்களாய் இருக்கின்ற இலஞ்சத்தையும் ஊழலையும் ஒழிக்க இப்பிரபஞ்சத்தில் இனி எவரும் புதிதாக பிறந்து வரப்போவதில்லை... சமுதாயத்தில் வாழ்கின்ற மக்கள் தான் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
தாங்கள் அறிய விரும்பும் தகவல்களை உடனே தெரிந்துகொள்ள கொண்டுவரப்பட்ட 'தகவல் அறியும் உரிமை' சட்டத்தை சாமானிய மக்களும் பயன்படுத்தும் போது தான் ஊழல்களை தடுக்க முயலும்.
நகர்மன்றத் தலைவருக்கு சட்டம் அளித்துள்ள சில தனிப்பட்ட அதிகாரங்களை நன்மையான காரியங்களுக்கு நமது தலைவியும் பயன்படுத்த வேண்டும்.
'வழிகாட்டும் வள்ளுவன்' என்ற புத்தகத்தை படித்து பார்த்தால்... நமது நகர்மன்ற தலைமை சந்திக்க வேண்டிய சோதனைகள் இன்னும் எவ்வளவோ இருக்கின்றது. நமது நகர்மன்றமும் நிச்சயம் கரையேறும் என்ற நம்பிக்கையுள்ளது !!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross