செய்தி: “நல்ல நகர்மன்றம் அமைய என்ன வழி?” எனும் தலைப்பில் ஊழல் எதிர்ப்பு இயக்கம் நடத்திய கருத்தரங்கம்! விருத்தாச்சலம் நகர்மன்ற முன்னாள் தலைவர் டாக்டர் வள்ளுவன் சிறப்புரை!! திரளான பொதுமக்கள் பங்கேற்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்க, ஊழலை ஒழித்துக்கட்ட புறப்பட்டிருக்கும் எம் காயல் நகர மக்கள்........ posted byS.K.Shameemul Islam (Chennai)[11 October 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 22742
"நபியே அவர்கள் திருந்தவில்லை என்றால் நீங்கள் உங்களையே மாய்த்துக் கொள்வீர்கள் போலுமே" என்ற இறைமறை கருத்திற்கேற்ப முதுகை முறிக்கும் பல முயற்சிகளை நம்மூரிலும் ஒருகூட்டம் தொடந்து செய்து கொண்டேதான் இருக்கிறது.
எதிரி பலம் அன்றும் யானை பலமாகத்தான் இருந்தது.
யானைப்படையே கஃபாவை அழிக்க வந்ததும் வரலாறுதானே.
இறுதியில் நபிதான் வென்றார்கள்.
யானைப்படை தோற்றுப்போனது என்பது வரலாறு.
இங்கும் அதுதான் தொடர் முயற்சியாக நடந்து வருகிறது.
சத்தியத்தை சூது கவ்வும்; ஆனால் சத்தியம் வெல்லும் என்பது அனைவரும் அறிந்ததே.
ஊழல் அரசுகளால் காலங்காலமாய் அவதியுற்ற மக்கள் எழுச்சிதானே அரபுலகத்தையே புரட்டிப்போட்டு அதன் விளைவாய் ஒழுக்கமுள்ளவர்களின் ஆட்சி ஒவ்வொரு நாடாய் அரங்கேறி வருகிறது.
இக்கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களை மேடையில் பார்க்கும் போது மக்கள் மத்தியில் அவ்வளவு பரிச்சயமில்லாதவர்கள் போல்தான் தெரிகிறது.
ஆனால் சாமானியர்கள் தான் இன்றைய அரபுலக புத்தெழுச்சியின் கதாநாயகர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை சற்று குறைவாகவே தெரிகிறது. மக்கள் எவ்வளவுக்கு எவ்வளவு விழிப்புணர்ச்சி பெறாமல் இருக்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அவர்கள் வரிப்பணத்தில் ஆட்சி செய்பவர்களுக்கு தொடர் கொண்டாட்டமே.
ஆனால் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களைப் பார்க்கும்போது அதிகமாக படித்தவர்களாகவும் நாட்டு நடப்புகளைத் தெரிந்தவர்களாகவுமே பார்க்கமுடிகிறது.
எனவே ஊழலை ஒழித்துக்கட்டி ஊர் மக்களைப் பாதுகாத்து நல்லவர்களைக் கொண்டு தம்மை ஆளவைக்கும் வரை இவர்கள் ஓயமாட்டார்கள் என்பது விடியலின் ஒளிக்கீற்றாய் எம் அடிமனதில் விழுகிறது.
வாழ்க, ஊழலை ஒழித்துக்கட்ட புறப்பட்டிருக்கும் எம் காயல் நகர மக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross