செய்தி: இக்ராஃவுக்கு சொந்த இடம் வாங்க தக்வா / இக்ராஃ தலைவர் முன்முயற்சி! 30 பேர் இக்ராஃவின் ஆயுட்கால உறுப்பினராக விருப்பம்!! தக்வா பொதுக்குழுக் கூட்டத்தில் அறிவிப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...ஆரோக்கியமான கருத்து பரிமாற்றங்கள் posted bymackie noohuthambi (kayalpatnam)[11 October 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22755
வாவு சம்சுதீன் மாமா அவர்களின் ஆதங்கம் புரிகிறது. மற்ற உறுப்பினர்களின் எதிர் வாதங்களும் நியாயமானவையே. பேசிக் கலைவதற்கு அல்ல கூட்டம். பேசி இன்னென்ன முடிவுகள் எடுத்து அது செயலாக்கம் பெற்றன என்று வரும்போதுதான் அந்த கூட்டம் அர்த்தம் உள்ளதாக அமையும். ஆனாலும் ஒரு திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள சிரமங்கள் இலேசானதல்ல. சொல்வது யார்க்கும் எளிதாம். அரியவாம் சொல்லியவண்ணம் செயல் என்று சொல்வார்கள்.
இக்ரா வுக்கு சொந்தமாக ஒரு இடம் வாங்க அங்கிருப்பவர்கள் யோசித்து முடிவெடுக்க முடியாது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். இக்ராவில் அங்கம் வகிப்பவர்கள், காயல்பட்டினத்தில் இப்போது இருப்பவர்கள் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு இடங்களை அடையாளம் காட்டினால் மற்றவர்கள் பேசலாம். அவர்களுக்குதான் அதைப்பற்றிய நுணுக்கம், யார் யார் நிலம் எங்கு எங்கு உள்ளது. எது இக்ரா அமைய பொருத்தமானது, அந்த நிலத்தின் சொந்தக்காரர் பொதுநலத்தில் அக்கறை உள்ளவரா, குறைந்த விலைக்கு அதை தருவாரா, நன்கொடயாகவே தருவாரா என்ற விவரங்களை எல்லாம் அவர்கள்தான் சேகரித்து தர முடியும். எனவே ஊரிலுள்ள இக்ரா நண்பர்கள் ஆதரவாளர்கள் ஒரு குழு ஏற்படுத்தி ஊரை சுற்றி வலம் வரவேண்டும்.
எங்கோ ஒரு காட்டு பகுதியில் யாராவது நிலம் தந்தால் அதை வாங்கி என்ன செய்ய. ஊர் எல்லைக்குள்ளும் இருக்க வேண்டும். மக்கள் தினசரி வந்து போக தோதாகவும் இருக்க வேண்டும்.பல விஷயங்களை இதில் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. KMT நிலம் வாங்க சம்பத்தப்பட்டவர்கள் என்ன அணுகுமுறையை கையாண்டார்கள் என்ற விபரத்தை பாசி ஹாஜி, உவைஸ் ஹாஜி, ஹாஜி காக்கா போன்றோரை அணுகி கேட்கலாம்.சாதாரண விஷயமல்ல, மாமா அவர்கள் தலைவராக இருக்கும் ஒரு வருட காலத்துக்குள் இதை செய்து சாதனை படைக்க ஆசைப்பட்டாலும். நிலம் வாங்குவது என்பது கடையில் போய் என்ன விலை கொடுத்தாவது நாம் ஆசைப்பட்டதை வாங்குவது போல் உள்ள சமாச்சாரமா இதெல்லாம் தக்வா உறுப்பினர்கள் வல்லவர்கள்,தொழில் அதிபர்களுக்கு சொல்லியா தெரிய வேண்டும். உங்கள் கவலைகள் உயர்ந்த நோக்கம் உள்ளவை. அல்லாஹ்வின் உதவியை நாடி எல்லோரும் து ஆ கேட்போம். அல்லாஹ் நாடினால் நல்ல உள்ளங்களை இணைக்க அவர்களை அடையாளம் காட்ட,அவனுக்கு ஒரு நொடி போதும்.நல்ல இக்ஹ்லாசான எண்ணங்களுக்கு அல்லாஹ் துணை நிற்பான்..
ஆயிரம் பக்கங்கள் உள்ள காவியம் ஒவ்வொரு வரியாகத்தான் எழுதப்படுகிறது...ROME IS NOT BUILT IN A DAY என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே.
தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்..... தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும் ..... கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்கும். முயற்சிப்போம் இறைவனிடம் கையேந்துவோம் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை. நமது கனவுகள் நனவாகும் வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross