நகரின் முக்கிய தூண் சாய்ந்தது! posted byS.K.Salih (Kayalpatnam)[13 October 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22795
கண்ணியத்திற்குரிய சாவன்னா மாமா அவர்கள், நகர்நலனில் மிகவும் அக்கறை கொண்டவர்கள்... எப்போதும் அவர்களது பேச்சு நகர்நலனைப் பற்றியே இருக்கும்.
என்னைச் சந்திக்கும்போதெல்லாம் என் தந்தை மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் அவர்களை நினைவுகூர்ந்து, அவ்விருவரும் சென்னையிலிருந்தபோதான அனுபவங்களை மனமகிழ என்னுடன் பகிர்ந்துகொள்வார்கள்.
நமதூரில் ஒற்றுமைக்கான எந்த செயல்திட்டமானாலும், அது சிறியதாயினும் சரி - பெரியதாயினும் சரி... அனைத்தையும் பெரியதாகவே கருத்திலெடுத்துக்கொண்டு நெசவு ஜமாஅத்தின் பிரதிநிதியாக வந்து அவையை அலங்கரிப்பார்கள்...
பொதுச் சபைகளில் அவர்கள் தன்னை அறிமுகப்படுத்தும் பாங்கே தனி... நாம் எல்லோரும் எல்லோருக்கும் தெரிந்தவர்கள்தான் என்றாலும், பொது நிகழ்ச்சிகளில் அவர்களது கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு முன், ஒவ்வொரு முறையும் அவர்கள் தெரிவிக்கும் வாசகம்... “என் பெயர் எஸ்.ஏ.ஷாஹுல் ஹமீது... நான் எங்கள் ஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளியின் நெசவு ஜமாஅத் சார்பாக அதன் பிரதிநிதியாக வந்திருக்கிறேன்...” என்று அவர்கள் தன் கம்பீரக் குரலில் தெரிவிக்கும் முறை, பலரும் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டிய நல்ல நடைமுறை!
கொள்கையால் - குடும்பங்களால் - குலத்தால் - இடத்தால்... இருக்கக்கூடாத பல மாச்சரியங்கள் நம் மக்களிடையே இருந்து வரும் இக்காலகட்டத்திலும், இவர்கள் போன்ற வெகு சிலர் - ஊர் நலனென்று வரும்போது அவற்றையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு - குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் ஒற்றுமைக்காக உழைத்து வந்ததால் - வருவதால்தான் இன்று நமதூரில் இந்தளவுக்காவது ஒற்றுமை நிலைக்கிறது.
அன்னாரின் மறைவு, நெசவு ஜமாஅத்திற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த காயல்பட்டினத்திற்கும் பேரிழப்பே!
அன்னாரின் பாவப் பிழைகளை கருணையுள்ள அல்லாஹ் பொருத்தருள்வானாக,.. அவர்களின் நற்கருமங்களை அவனது பேரருளால் ஏற்றுக்கொள்வானாக...
கள்ளம் கபடமில்லா அந்த வெள்ளை உள்ளத்தை வல்ல அல்லாஹ் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில் சேர்த்தருள்வானாக, ஆமீன்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களது மக்களான தம்பி அமீர் சுல்தான், தம்பி கிதுறு முஹம்மத் உள்ளிட்ட - மர்ஹூம் அவர்களின் குடும்பத்தாருக்கு அல்லாஹ் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross