Re:...பழத்தோட்டம் பணத்தோட்டம் posted bymackie noohuthambi (kayalpatnam)[16 October 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22826
முதலமைச்சருக்கு நன்றி. ஒரு காலத்தில் இந்த பழ
தோட்டத்துக்கு போவதற்கு அனுமதி இல்லை. ஆனாலும் பணம் கொடுத்து அதிகாரிகளை பார்த்து கவனித்தால் போய் சுற்றி பார்த்து வரலாம். பழத்தோட்டம் ஒரு பணதோட்டமாக இருந்தது. அந்த நிலையை மாற்றி பொது மக்கள் போய் குதூகலமாக பொழுதை கழிக்க வாய்ப்பு கொடுத்த முதல்வருக்கு பாராட்டுக்கள்.
ஒரு பெரிய குறை, செல்லுமிடமெல்லாம் துர்நாற்றம் அடிக்கிறது, பொது மக்கள் சத்திரங்களில் தங்குபவர்கள் கழிப்பறைகளை பயன்படுத்துவதில்லை. பழக்க தோஷமோ என்னவோ திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கவும் மல சலம் கழிக்கவும் தயங்குவதில்லை. நோய் நீக்கும் குற்றாலம் நோய்களை வாங்கும் இடமாகவும் மாறுகிறது. spot fine என்று அந்தந்த இடத்தில் தண்டணை அபராதம் விதிக்கும் முறை வெளிநாட்டில் உள்ளது போல் இங்கேயும் ஏற்படுத்தும்படி மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களை இதன் மூலம் வேண்டிக்கொள்கிறேன்.
சிற்றருவிக்கு மேலே வரை வாகனங்களை கொண்டுபோய் நிறுத்தும் வசதியை இப்போது நிற்பாட்டி விட்டார்கள். மெயின் ரோட்டில் வாகனத்தை நிறுத்தி விட்டு வெகு தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. வயதானவர்கள். மாற்றுதிரனாளிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே அந்த வசதியை மீண்டும் ஏற்படுத்தும்படியும் ஆட்சி தலைவர் அவர்களை வேண்டிக்கொள்கிறோம். அருவிகளுக்கு போகும் வழியில் இடை மறித்து பெரும் தொகையை வாகன வரி யாக கேட்கிறார்கள். அதையும் முறைப்படுத்தி. குற்றாலம் ஏழைகளின் கொடைக்கானல் என்ற உண்மையை ஏழைகள் உணர்ந்து அனுபவிக்க ஆவன செய்யும்படியும் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களை வேண்டிக்கொள்கிறோம்.
இந்த இணைய தள ஆசிரியர் இந்த தகவலை அவருக்கு forward செய்யுமாறு பொது மக்கள் சார்பாக வேண்டிக்கொள்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross