Re:...ஹஜ் பிறையே வருக..எங்களிடையே ஒற்றுமை பெருக வருக posted bymackie noohuthambi (kayalpatnam)[17 October 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22844
சந்தோசமான செய்தி.
உங்கள் இணையத்தளத்தில் குறிப்பிட்டிருந்த படி இன்று 17 ஆம் திகதி, பிறை கண்டு பிடிப்பது பிறை கண்டு விடுவது என்ற கொள்கை உள்ளவர்களுக்கு தலைப்பிறை என்றும். 25 ஆம் திகதி அரபா என்றும் 26 ஆம் திகதி பெருநாள் என்றும் குறிப்பிட்டிருந்தீர்கள். இப்போது சவுதி அரசும், அல் ஜாமிஉல் அஸ்ஹர் ம் இதே நாளை முதல் பிறை, அரபா பெருநாள் என்று அறிவித்திருப்பதால். எல்லோரும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது அல்ஹம்துலில்லாஹ். நம் மீது இரக்கப்பட்டு அல்லாஹ்வும் அவனது படைப்பான பிறையும் நம்மை ஒன்றாக்கியுள்ள நேரத்தில் ஹிஜ்ரா கணக்கு பார்ப்பவர்களும் கொஞ்சம் இறங்கி வந்து அல்லாஹ்வின் ஆசைக்கு கட்டுப்பட்டு ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுவது நல்லது.
எல்லா மாயையும் வாதங்களும் அல்லாஹ்வின் தீர்ப்புக்கு முன்னாள் மண்டியிட வேண்டும். அவன் நாடினால் சூரியன் மேற்கே உதிக்கும் . விஞ்ஞானம் இதை ஏற்றுக்கொள்ளுமா??படைத்தவன் நினைப்பதே உண்மை. மற்றவர்கள் நினைப்பது எல்லாம் மாயம். என்பதை எல்லோரும் உணர்ந்து புனித ஹஜ்ஜுப்பெருநாளை உவகையுடன் கொண்டாட ஆயத்தமாவோம். அவன் விரும்பும் குர்பான் என்ற நல் அமலை செய்து அவனது அன்பை பெறுவோம். எல்லோருக்கும் இதயம் நிறைந்த ஈத் முபாரக்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross