அல்லாஹ் தான் நமதூரைப் பாதுகாக்க வேண்டும்...................... posted byS.K.Shameemul Islam (Chennai)[17 October 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 22848
சிந்திக்கவேண்டிய, அறிவுப்பூர்வமான கட்டுரையை சகோதரர் புஹாரி வழங்கி இருக்கிறார்.
தேவை, வழங்கு (Demand, Supply) என்பது வியாபாரத்தில் காணப்படும் மூலக்கூருகலாகும்.
டிமாண்ட் இல்லை ஆனால் சப்லை அதிகமாக உண்டெனில் அந்த வியாபாரம் விரைவிலேயே அடிபட்டு போகும்.
டிமாண்ட் அதிகம் ஆனால் சப்லை இல்லையெனில் உற்பத்தியில் கோளாறுகள் இருக்கலாம். அல்லது பொருள் வருவதற்கு தடையேதும் இருக்கலாம். அதில்தான் பணவீக்கமும் உண்டாகிறது. பல பிரச்னைகளும் எழுகிறது.
இதையே மார்க்கக் கல்விக்கும் அப்லை செய்து பார்ப்போமானால் கற்க வேண்டிய தேவை அதிகமாக உள்ளது. ஆனால் கற்றுக் கொடுப்பவர்களுக்கு (சப்லை) பஞ்சமில்லை.
இது இப்போதைக்கு உள்ள நிலவரம் மட்டும் தான்.
ஏனெனில் மக்தபைப் பற்றி விவாதிக்கும் இவ்வேளையில் மதரஸாக்களின் நிலையே மூடுவிழா நடைபெற்று வருவதாக நம் கட்டுரையாளர் ஒரு அபாயச்சங்கு ஊதி இருக்கிறார்.
ஒரு பழம்பெரும் மத்ரஸாவில் வருடத்திற்கு 500 பேர் படித்த நிலை மாறி இப்போது வெறும் 250 என்ற கணக்கில் படித்து வருவதாகவும் அதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை மிக மிகக்குறைவாக இருப்பதாகவும் ஒரு சங்கைக்குரிய மார்க்க அறிஞர் தனது பேச்சுக்களில் தொடர்ந்து புலம்பி வருகிறார்.
அடுத்து தேவையைப் பற்றி பார்ப்போம்.
ஆன்மீக வறுமை நிலவி வரும் காலமிது.
இப்போதுள்ள பஞ்சத்திற்கும் வறுமைக்கும் அடிப்படையாக ஆன்மீக வறுமையைப் பிரதானமாகக் கொண்டால் அதில் பிழை இல்லை.
உதாரணத்திற்கு நமதூரில் வெகுகாலமாக மழைப் பெய்யவில்லை என வைத்துக்கொள்வோம். அதுதானே உண்மையும் கூட.
மழை வேண்டுமெனில் அதற்கான தொழுகையை நாம் தொழுது இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள்.
இப்போது மதரசாக்களும் இல்லை மக்தபுகளும் இல்லை எனும் நிலையில் எப்படி யாரைக்கொண்டு இதைச்செய்ய முடியும்.
வெளியூர்களில் பல ஊராருக்கு மழைத் தொழுகை என்றால் என்னவென்றே தெரியவில்லை. இந்த நிலையில்
ஆன்மீகத் தொடர்பு கிடைக்காது. அந்த அல்லாஹ்வும் காப்பாற்ற மாட்டான்.
ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான் :
ஒரு சமூகம் தன்னைத்தானே மாற்றிக் கொள்ளாதவரை அல்லாஹ்வும் அதை மாற்ற (உதவ) மாட்டான்.
அல்லாஹ் நம்மை கைவிட்டு விட்டால் பிறகு யாரால் நம்மைக் காப்பாற்ற முடியும்.
இன்று நிகழும் அனைத்து தீமைகளுக்கும் (என்னென்ன தீமைகள் என்று நான் சொல்லவா அல்லது நீங்களே எண்ணிக் கொள்கிறீர்களா???) மூல காரணமே மார்க்க அறிவு குறைந்து போனதுதான்.
உலகக் கல்வியின் மீதான மோகமும் வேகமும் மார்க்கக் கல்வியை அடியோடு புறந்தள்ளி விட்டது.
சென்ற 15-20 ஆண்டுகளாய் கவனிக்கத் தவறிய மார்க்க அறிவு இப்போது ஆன்மீக வறுமைக்கு இழுத்துச் சென்றதால் தான் 15-20 வயதினர் (ஆண், பெண் இரு பாலரும்) ஒழுக்க வீழ்ச்சியின் உச்சிக்கே சென்று கொண்டிருக்கின்றனர்.
எனவே இப்போது குறைந்தது சில பேராவது இது பற்றித் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் நிலையில் நமதூறார் இவ்வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவில்லையெனில் அந்த அல்லாஹ் தான் நமதூரைப் பாதுகாக்க வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross