Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[20 October 2012] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22921
அப்பாடா... எங்கள் மஹ்லரா நகருக்கு விடிவு காலம் வரப்போகிறதாக்கும். அல்ஹம்து லில்லாஹ்.
இதற்க்கு முயற்ச்சி செய்த அனைவர்களுக்கும், MLA அண்ணாச்சி அவர்களுக்கும் நன்றிகள்.
* இனி பைக்கை மண்ணில் தள்ளிக்கொண்டு போகாமல், வீடுவரை ஹாயாக செல்லலாம்.
* டயர் பஞ்சர் பார்க்கும் செலவு குறைந்தது.
அப்படியே.. அங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் நிலையத்தை கவனியுங்கள். அந்த கழிவு குட்டையை மூடாமல், ஊர் பூராவும் கொசு மருந்துப்புகை அடித்து என்ன பயன்...!!
வித விதமா, ரகம் ரகமா, பலவகை கொசுக்களை எங்கள் ஏரியாவில் காணலாம். ஆராய்ச்சி மாணவர்களே வருக..!! டெங்கு, டொங்கு காய்ச்சல் என்று வந்த பின்பு பாட்டு பாடுறது நல்லது இல்லை.
அப்புறம்.. இந்த நகருக்கு பெயர் தான் மஹ்லரா நகர், ஆனால் அங்கு இருக்கும் தெருக்களின் பெயர் "முத்தாரம்மன் கோயில் தெரு", "சேது ராஜா தெரு".
ஊர் பெரியதாகி பல பல வருடங்கள் ஆகிவிட்டன. குத்துக்கல் தெரு கடைசியில் ஆரம்பித்து, கோமான் தெரு ஆரம்பம் வரை இருக்கும் பல தெருக்களின் பெயர்கள் இந்த இரு பெயர்கள் தான். கொஞ்சம் கவனத்தில் வையுங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross