1997 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டம் (MEMBER OF LEGISLATIVE ASSEMBLY - CONSTITUENCY DEVELOPMENT SCHEME) அமலில் உள்ளது. இத்திட்டப்படி - தமிழக சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்படும் 234 உறுப்பினர்களும் அவர்கள் தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளுக்கு நிதி ஒதுக்கலாம். எந்தெந்த பணிகள் என்பதை சட்டமன்ற உறுப்பினரே தேர்வு செய்யலாம்.
இவ்வாண்டு - இந்த திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட, அனுமதிக்கப்படாத - திட்டங்கள் குறித்த விபரங்கள் காண - இங்கு அழுத்தவும்
துவக்கத்தில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் - ஆண்டு ஒன்றிற்கு 25 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போது அது படிப்படியாக உயர்ததப்பட்டு - ஆண்டு ஒன்றிற்கு - ரூபாய் 2 கோடி ஒதுக்கப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட பணிகள் என்றும், அனுமதிக்கப்படாத பணிகள் என்றும் அரசு சில வழிமுறைகளை வகுத்துள்ளது.
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரான தி.மு.க. உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனின் 2012 - 13 நிதி மூலம் - காயல்பட்டினத்தில், மூன்று இடங்களில் சாலை பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 21 லட்ச ரூபாய் மதிப்பிலான இந்த பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரி - இன்று நாளிதழில் விளம்பரம் வெளியாகியுள்ளது.
தேர்வு செய்யப்பட்டுள்ள மூன்று இடங்கள் வருமாறு:
1. 18 வது வார்டு மஹ்லரா காலனியில் தார்சாலை அமைத்தல் (9 லட்ச ரூபாய்)
2. 9 வது வார்டு அப்பாபள்ளி தெருவில் தார்சாலை அமைத்தல் (9 லட்ச ரூபாய்)
3. 12 வது வார்டு ஓடக்கரை தெருவில் சிமென்ட் சாலை அமைத்தல் (3 லட்ச ரூபாய்)
ஒப்பந்தப்புள்ளிகள் அட்டவணை - நவம்பர் 6 வரை வழங்கப்படும் என்றும், நவம்பர் 7 அன்று பிற்பகல் 3 மணிக்கும் ஒப்பந்தப்புள்ளிகள் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்றும், அதே தினத்தில் - பிற்பகல் 3:30 மணி அளவில், ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
அப்துல் மாலிக்,
மாஸ்டர் கம்ப்யூட்டர் அகாடமி.
[செய்தி திருத்தப்பட்டது @ 19.10.2012/20:00] |