தமிழக அரசின் IUDM திட்டத்தின் கீழ் இவ்வாண்டு காயல்பட்டினம் நகராட்சியில் சுமார் 2 கோடி ரூபாய்க்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவைகளில் 94.92 லட்ச ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்பந்தப்புளிகள் கோரி விளம்பரம் நேற்று வெளியிடப்பட்டது.
அத்திட்டங்கள் குறித்த முழு விபரம் இன்று - தமிழக அரசின் ஈ-டெண்டர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் மழை நீர் வாறுகால் பணிக்காக 48.69 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் விவரிக்கப்பட்டிருந்தன.
இருப்பினும் இந்த தொகை - 4,86,900 லட்சம் ரூபாய் என - ஈ-டெண்டர் இணையதளத்தில் (https://tntenders.gov.in) - டெண்டர் மதிப்பு (Tender Value) தகவலில், பதிவு செய்யப்பட்டுள்ளது. டெண்டர்களில் பங்கேற்க விரும்புவோர் - டெண்டர் தொகை (Search by Tender Value) மூலமாக அறிவிப்புகளை தேடும்போது - 5 லட்சத்திற்கும் அதிகமான தொகையை கொண்டு தேடினால் - காயல்பட்டினம் நகராட்சியின் இந்த அறிவிப்பு முடிவுகளில் (Search Results) தென்படாது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross