தமிழக அரசின் - ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் (INTEGRATED URBAN DEVELOPMENT MISSION) 2012-2013இன் கீழ் ரூபாய் 1 கோடியே 95 லட்சம் தொகையும், நகராட்சி பொதுநிதியின் கீழ் ரூபாய் 12 லட்சம் தொகையும் என மொத்தம் ரூபாய் 2 கோடியே 7 லட்சம் செலவு மதிப்பீட்டில், காயல்பட்டினத்தில் நலத்திட்டப் பணிகள் செய்வதற்கான தீர்மானம் கடந்த அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி நடந்த காயல்பட்டின நகரமன்ற அவசர கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து - இப்பணிகள் குறித்த விளம்பரம் நேற்று (அக்டோபர் 17) - நாளிதழ்களில் வெளியானது.
டெண்டர் குறித்த முழு விபரம் இன்று (அக்டோபர் 18) காலை - தமிழக அரசின் ஈ-டெண்டர் இணையதளமான - https://tntenders.tn.gov.in - இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம்படி - சாலை பணிகளுக்காக, 46.23 லட்ச மதிப்பில், ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. மேலும், மழை நீர் வாறுகால் பணிக்காக 48.69 லட்சம் மதிப்பில், ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.
ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை காண இங்கு அழுத்தவும்
சாலை பணிகள் குறித்த ஒப்பந்த ஆவணத்தை காண இங்கு அழுத்தவும்
மழை நீர் வாறுகால் பணிகள் குறித்த ஒப்பந்த ஆவணத்தை காண இங்கு அழுத்தவும்
தீர்மானம் நிறைவற்றப்பட்ட - 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் LED தெருவிளக்குகள் வாங்குவதற்கான டெண்டர் அறிவிப்பு மற்றும் 90 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான எரிவாய்வு நிலையம் அமைப்பதற்கான டெண்டர் அறிவிப்பு - தற்போதைய அறிவிப்புடன் வெளியிடப்படவில்லை. |