ஹஜ் பெருநாளையொட்டி பெருநாளன்றும், அதற்கடுத்த - அய்யாமுத் தஷ்ரீக் என்றழைக்கப்படும் மூன்று நாட்களிலும், ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்டவற்றை அறுத்துப்பலியிடுவது இஸ்லாம் வலியுறுத்திய ஒரு கிரியையாகும்.
ஆட்டுக்கு ஒருவரும், மாடு மற்றும் ஒட்டகத்திற்கு ஏழு பேரும் பங்குதாரர்களாக இருக்கலாம். அறுக்கப்படும் அப்பிராணிகளின் இறைச்சியை குடும்பத் தேவைக்கு எடுத்துக்கொண்டது போக, உற்றார் - உறவினருக்கும், ஏழை - எளியோருக்கும் அன்பளிப்பாக வழங்கப்படுவது வழமை.
அந்த அடிப்படையில், காயல்பட்டினம் நகரின் பள்ளிவாசல்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பாக, கூட்டு முறையில் உள்ஹிய்யா கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் - கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில், மாடு பங்கு ஒன்றுக்கு ரூ.2000/- எனவும், ஒட்டகம் பங்கு ஒன்றுக்கு ரூ.8000/- எனவும் தொகை நிர்ணயிக்கப்பட்டு, பங்குதாரர்கள் சேர்க்கை நடைபெற்றுக்கொண்டிருந்தது.
நிர்ணயிக்கப்பட்ட அளவு எட்டப்பட்டுவிட்டதால், பங்கு சேர்க்கை நிறைவுற்றுவிட்டதாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. |