தூத்துக்குடி மாவட்டத்தில் கேபிள் டிவி இணைப்பு பெற்றுள்ளவர்கள் எண்ணிக்கையை கண்டறிய கணக்கெடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
தூத்துக்குடி மாவட்டத்தில் கேபிள் டிவி இணைப்பு வைத்திருக்கும் சந்தாதாரர்களின் எண்ணிக்கையினை சம்மந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்களின் மூலம் கணக்கிடும் பணி தற்போது நடைபெற உள்ளது. அதற்கான படிவங்கள் அந்தந்த நியாய விலைக்கடை விற்பனையாளர்களுக்கு வட்ட வழங்கல் அலுவலர்களால் வழங்கப்படவுள்ளது. எனவே, நியாய விலை கடைகளில் உணவு பொருட்கள் வாங்குவதற்கு நேரில் வரும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களும், கேபிள் டிவி இணைப்பு குறித்த படிவத்தை நிரப்பி அந்தந்த நியாய விலைக்கடை பட்டியல் எழுத்தரிடம் கொடுத்திட வேண்டும் என பொது மக்கள் அனைவருக்கும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இப்பணிக்கு பொது மக்கள் தகுந்த ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஒப்பம்,
ஆஷிஷ் குமார்,
மாவட்ட ஆட்சியர்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|