தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை துவங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காயல்பட்டினம் மற்றும் சுற்றுப்புறங்களில் பெரும்பாலும் தினமும் மாலை - இரவு - நள்ளிரவு நேரங்களில் மழை பெய்துவருகிறது. காலை நேரங்களில் இதமான இருண்ட வானிலை நிலவுகிறது.
இன்று காலையில், காயல்பட்டினத்தின் மழைநீர் தேக்கக் காட்சிகளை படப்பதிவு செய்யச் சென்றபோது கண்ணில் பட்ட கடற்கரையின் கண்கொள்ளாக் காட்சிகள் பின்வருமாறு:-
மாஷா அல்லாஹ்... புகைபடத்தை பார்க்க மிக அருமையாக உள்ளது...!
இப்புகைபடத்தை எடுத்தவர் இந்த காட்சியை நேரில் அனுபவித்து குளிர்ச்சியான சூழலை ரசித்தவாறு தனது கேமராவில் படம்பிடித்து எங்களையும் இந்த இயற்கையை ரசிக்க செய்துள்ளார் புகைப்படத்தின் மூலம்...
2. ஸுப்ஹானல்லாஹ்! posted byசாளை பஷீர் (Kayalpatnam)[21 October 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22946
மாஷா அல்லாஹ்! மனதை எங்கோ இழுத்துச்செல்லும் காட்சிகள்.
வானும் கடலும் அதனதன் அளவில் பெரும் வண்ணக்குவியல்கள்தான்.
வானம் எல்லோருக்கும் வாய்த்தது. ஆனால் கடலும் கடலோரமும் அனைவருக்கும் வாய்ப்பதில்லை. அந்த வகையில் நமதூர் பாக்கியம் பெற்றதுதான்.
வானும் புவியும் ஒன்றிணைந்து கலவையாக மாயம் காட்டும்போது அதை வர்ணிப்பது அத்தனை எளிதல்ல.
ஒரு நாளின் தொடக்கமான வைகறை விடியலும் , முடிவான அந்தியும் கடலுக்கு எழிலூட்டுவதை பார்க்க தவறுவது என்பது உண்மையிலேயே ஒரு இழப்புதான்.
நீல இளம் பச்சை கலந்த கடல் அலையும் நீலம்,சிகப்பு , ஒரேஞ்ச், கருப்பு , வெளுப்பு என வாரி இறைக்கும் வானும் இந்த மாறும் காட்சிகளின் மேடை போல காட்சியளிக்கும் வெண் மணல் கடற் கரையும் அப்படியே விட்டு வைக்கப்பட வேண்டும்.
இவைகளை dcw கழிவு , சுற்றுலாவை ஊக்குவிக்கின்றோம் என நிரந்தர கல் கட்டிடங்கள் பெயரால் கறை படிந்ததாக மாற்றுவது பெருங்குற்றம்.
எங்கள் கடலையும் , கடற்கரையையும் எங்கள் மூதாதையர் தந்த மேனிக்கே எங்களிடமே திரும்ப தந்து விடுங்கள்.
ஏனென்றால் அவை எங்களிடம் தரப்பட்ட அமானிதம்! எங்கள் பிள்ளைகளிடம் பொறுப்போடு ஒப்படைக்க வேண்டியுள்ளது.
3. வங்கக் கடல் எங்களது என்று சங்கே முழங்கு...! posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[21 October 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22948
டியர் அட்மின் அவர்களே! ஒரு செய்திக்காக அதற்கு தகுந்த கருத்தை பதிவு செய்து விட்டு அக்கருத்து வேறு ஒரு செய்திக்கும் பொருந்தும் பட்சத்தில் அதே கருத்துக்களின் வரிகளை அச் செய்திக்கு பதிவு செய்தால் ஒரே கருத்து என்று நிராகரித்து விடுவீர்களோ? ரெம்ப குழப்புறேனோ? சரி! இச் செய்திக்கு கீழே உள்ள கருத்து பொருத்தமானதெனில் பிரசுரிக்கவும். இனி கத்திரி போட்டலும் பரவாயில்லை! சொல்ல வந்ததைச் சொல்லி விடுகின்றேன்.
சமீப காலமாக வெளிவரும் அனைத்து செய்திகளின் புகைப்படங்களும் அற்புதம்! மிக நேர்த்தியாகவும், தெளிவாகவும் உள்ளன. பொதுவாக மக்களுக்கு சென்றடையும் செய்திக்கு அதை முழுமையாக உள் வாங்கிக் கொண்டு அதற்கேற்ப புகைப்படங்களை வெளியிட்டால் மட்டுமே அச்செய்தி மக்களின் மனதில் பதியும்!
ஆக இந்த கை வந்த கலையை தன் கையில் வைத்திருக்கும் அந்த புன்னியவானின் புகைப்படம் இல்லாவிட்டலும் பரவாயில்லை! அவரது பெயரையாவது போடுங்கள்!
-ராபியா மணாளன்.
Moderator: ஒரே செய்தியில் ஒன்றுக்கு மேற்பட்ட அளவில் ஒரே கருத்து பெறப்பட்டால் மட்டுமே “ஒரே கருத்து மீண்டும்” என்று கருதி நிராகரிக்கப்படும்.
4. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[21 October 2012] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22958
அஸ்ஸலாமு அலைக்கும்
என்ன அருமையான இயற்கை மிகுந்த சூப்பர்......காட்சிகள் கண்டிப்பாக இந்த கண்ணுக்கு இனிமையான இயற்கை காட்சியை படம் எடுத்தவர்...நன்கு நேரில் ரசித்து இருப்பாரே ......கொடுத்து வைத்தவர் .... சகோதரரே .....தமக்கு எம் பாராட்டுக்கள் .....
இது போன்ற நல்ல ....நல்ல ....இயற்கையான நம் ஊர் கடற்கரை காட்சிகளையும் எம் கண் முன் கொண்டு வரவும் .......
வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA
3:191. அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, “எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!” (என்றும்;)
அல் குற் ஆன்=
நபி(ஸல்) அவர்கள், தம் கையை உயர்த்திப் பிரார்த்தனை செய்தார்கள். அப்போது, வானம் (மேகங்கள் இல்லாமல்) கண்ணாடியைப் போன்றிருந்தது. (நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தவுடன்) காற்று ஒன்று வேகமாக வீசி மேகக் கூட்டத்தைத் தோற்றுவித்தது. பிறகு, அந்த மேகக் கூட்டம் ஒன்று திரண்டது. பிறகு, வானம் மழையைப் பொழிந்தது.
நாங்கள் தண்ணீரில் மூழ்கியபடி (பள்ளிவாசலிலிருந்து) வெளியே வந்து எங்கள் இல்லங்களை அடைந்தோம். அடுத்த ஜும்ஆ (நாள்) வரை எங்களுக்கு மழை பொழிந்து கொண்டேயிருந்தது.-புகாரி 3682
அன்பு மொடரேட்டர் அவர்களே இவ்வளவு அருமையான காட்சி களை எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் வந்து படம் எடுக்கும் போது எங்களுக்கும் ஒரு ஃபோன் (280852 )தகவல் தந்தால் நாங்களும் இந்த இயற்கை காட்சியை அனுபவித்து இரண்டு றக்காத் ந்ஃபில் தொழுது இஸ்திங்ஃபாற், ஷுக்று ஸலாத் தொழுவோம் அல்லவா. உங்களுக்கும் தவாபு களும் கிடைக்குமே !.
ஃபோட்டோ கிராபஃபரிடமும் கூறுங்கள். மேற்சொன்ன குற் ஆன் ,ஹதீது படி நடந்த. நடத்தி வைத்த நன்மையும் கிடைக்குமே!! அல்லாஹ் தவ்ஃஃபீக் செய்வானாக!!!!!!!!.
சகோதரர் M.W.ஹாமித் ரிஃபாய் அவர்களுக்கு நன்றி... JAZZAAKKUMULLAAH.
மாஷா அல்லாஹ்... புகைபடத்தை பார்க்க மிக மிக அருமையாக உள்ளது...!
இப்புகைபடத்தை எடுத்தவர் இந்த காட்சியை நேரில் அனுபவித்து குளிர்ச்சியான சூழலை ரசித்தவாறு தனது ஸூப்பராக கேமராவில் படம்பிடித்து எங்களையும் இந்த இயற்கையை ரசிக்க செய்துள்ளார் புகைப்படத்தின் மூலம்... வீடியோவும் எடுத்து இருக்கலாம்.
ஃபேஸ் புக், யூ டியூ புக்கும் அணுப்புங்கள்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross